SuperTopAds

மதுபான சாலையை மூடக்கோரி பருத்துறையில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மதுபான சாலையை மூடக்கோரி பருத்துறையில் போராட்டம்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள மதுபான சாலையை அகற்றுமாளறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியொன்று இன்று காலை பருத்தித்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 16 பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப் போராட்ட பேரணி பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகம் வரை சென்று ஐனாதிபதிக்கான மகஜரொன்றும் பிரதேச செயலரின் கையளிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகரில் குறித்த மதுபான சாலை நிலையம் அமைந்திருப்பதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந் நகரில் பாடசாலைகள், வணக்கத்தலங்கள், வைத்தியசாலைகள் என்பன அமைந்திருப்பதால் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு குறித்த மதுபான சாலையை அகற்ற வேண்டுமென்று கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டம் நடைபெறுவதால் நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டி போராட்டத்திற்கு வர்த்தகர்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்ட பேரணியில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்

களும் பாடசாலைக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பல தரப்பினர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது ஐனாதபதிக்கான மகஜரொன்றும் பிரதேச செயலரின் கையளிக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் உள்ளிட்ட ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின். பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

'