மாலைதீவு சிறையில் உள்ள கைதிகள் விடுதலை தொடா்பில் அமைச்சா் சுவாமிநாதன் கூறிய வாக்குறுதிகள் காற்றில் பறந்துள்ளன..

ஆசிரியர் - Editor I
மாலைதீவு சிறையில் உள்ள கைதிகள் விடுதலை தொடா்பில் அமைச்சா் சுவாமிநாதன் கூறிய வாக்குறுதிகள் காற்றில் பறந்துள்ளன..

மாலைதீவில் கைது செய்யப்பட்டு தண்டனைக் காலம் நிறைவுற்றும் விடுவிக்கப்படாத கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் அளித்த வாக்குறுதி காற்றில் பறந்த்தாகவே உல்லது என கைதியாகவுள்ள முத்துலிங்கம் - யோகராசாவின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

2007ம் ஆண்டு மே மாதம் மாலைதீவுக் கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் மாலைதீவில் சிறைவைக்கப்பட்டு வழக்கு இடம்பெற்று தீர்ப்பளிக்கப்பட்டனர். இவ்வாறு தீர்ப்பளிக்கக்பட்ட ஒட்டுசுட்டான் , 

யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த மூவரும் மாலைதீவுச் சிறையில் தண்டனையை அனுபவித்த நேரம் எஞ்சிய காலத்தை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்குமாறு மூவரையும் மாலைதீவு அரசு இலங்கை அரசிடம் கையளித்திருந்த்து.

இவ்வாறு 2016 மார்ச் மாதம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளின் தண்டனைக் காலம் 2017ம் ஆண்டு நிறைவுற்றதாகவே நாம் அறிந்து அவர்களின் விடுதலைக்காக பல வழிகளிலும் முயன்றோம். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எம்மை கொழும்பிற்கு அழைத்துச் சென்று 

அப்போதைய சிறைச்சாலைகள் அமைச்சரான டி.எம்.சுவாமிநாதனை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தார். குறித்த சந்திப்பு 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின்போது எமது உறவுகளின் நிலமையை கேட்டறிந்த அமைச்சர் அதிகாரிளடம் தொடர்பு கொண்டு எமது உறவுகள் மூவரின் தண்டனைக் கோவைகள் அனைத்தும் மாலைதீவு மொழியில் உள்ளதனால் மொழி புரியாத தன்மை உள்ளது. 

அதனால் உடனடியாக குறித்த கோவைகள் அயலுறவு அமைச்சிற்கு அனுப்பி வைத்து மொழிபெயர்க்கப்படும். அதன் அடிப்படையில் விடுதலை இடம்பெறும். இருப்பினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால் ஒரு வார விடுமுறையில் உடனடியாக விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என வாக்குறுதி 

அளித்தும் 7 மாதம் கடந்ந நிலையில் எந்த முன்னேற்றமும் கிடையாது. இதேநேரம் அயலுறவு அமைச்சிற்கு அனுப்பிய கோவையின் மொழி பெயர்ப்பின் நிலமை என்ன எனவும் தெரியாது. 

இருப்பினும் மொழிபெயர்ப்பில் 2019ம் ஆண்டே தண்டனை முடிவுறுவதாக தற்போது பேசுகின்றனர். எனவே எமக்கு ஓர் உறுதியான நிலைப்பாட்டினை சிறைச்சாலைகள் அமைச்சர் தெளிவாக கூறவேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு