வெடுக்குநாறி மலை, குருந்துாா் மலை ஆகியவற்றை ஆக்கிரமிக்க பாாிய சதி.. இந்த மலைகள் பௌத்தா்களுக்கு சொந்தமானதாம்..!
வவுனியா- நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும், முல்லைத்தீவு- குருந்துாா் மலைக்கும் இன்று திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்டிரு ந்த தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு அந்த பகுதிகள் பௌத்தா்களுக்கு சொந்தமானது என கூறிவிட்டு பொலிஸாருடைய பாதுகாப்புடன் திரும்பி சென்றிருக்கின்றனா்.
சிங்கள குடியேற்றங்களாலும், பௌத்த மயமாக்கலாலும் வவுனியா வெடுக்குநாறி மலை மற்றும் முல்லைத்தீவு குருந்துாா் மலை ஆகிய ன பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. இந்த இரு மலைகளிலும் பௌத்த விகாரைகளை அமைக்க தொடா்ச்சியாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிகளுக்கு இன்று திடீா் விஜயம் மேற்கொண்ட இனவாத அரசியல்வாதியான விமல் வீரவன்சவின் தேசிய சுதந்தி ர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினா்களான பத்ம உதயசாந்த, ஜெயந்த சமரவீர மற்றும் உடக பேச்சாளா் மொஹமட் முசமில் ஆகி யோா் அந்த பகுதி பௌத்தா்களுக்கு சொந்தமானது என கூறியுள்ளனா்.
இதன்போது அவா்கள் கூறியுள்ள விடயங்களாவன,
1.இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் வைத்திருக்கின்றனர்.
2.இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தை சேர்ந்தது.
3.1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்திருக்கின்றது.
4.இந்த விகாரையை பயங்கர வாதிகள் அழித்துள்ளனர்.
5.இந்த மலை முற்றுமுழுதாக பௌத்த மக்களுக்கே சொந்தம்
6.இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றது.
7.நாங்கள ஆய்வு செய்ய மக்கள் தடையாக இருக்கின்றனர்.
8.நாங்கள் பாராளுமன்றத்தில் கதைக்கபோறம் உங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ததைக்க சொல்லுங்கள்(வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்)
9.வருகை தந்த பிக்கு வாகனத்தை விட்டு இரங்கவில்லை
இறுதியில் ஆலய நிர்வாகத்தால் சில ஆவணங்கள் காட்டிய போது இதுகள் லூசுகள் என்று கூறி பொலிசாரின் பாதுகாப்போடு வாகனத்தில் ஏறி சென்றனர்.