30 ஆயிரம் கோடி இராணுவத்திற்கு ஒதுக்கீடு. இந்த வரவு செலவு திட்டத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதாிக்குமா?

ஆசிரியர் - Editor I
30 ஆயிரம் கோடி இராணுவத்திற்கு ஒதுக்கீடு. இந்த வரவு செலவு திட்டத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதாிக்குமா?

மத்திய அரசின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டமையானது இந்த பணத்தை கொண்டு இராணுவம் வடகி ழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப வேலை திட்டங்களை செய்வதன் ஊடாக 

தமிழ் மக்கள்  இராணுவத்துடன் நெருக்கமாக உள்ளார்கள் என படம் காட்டுவதற்கும், அத ற்கும் மேலாக தமக்கு ஒதுக்கப்படும் பணத்தில் திட்டமிட்டு தமிழர் நிலங்களில் குடியேற்ற ப்படும் சிங்கள மக்களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கவும்;. 

தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கும். தமிழர் நிலங்களில் தங்களுடைய இராணுவ முகாம்களை விரிவுபடுத்தவும். இவ்வாறு தமிழர் விரோத செயற்பாடுகளை நிச்சயமாக இராணுவம் மேற்கொள்ளவுள்ளது.

மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், இவ்வாறு தமிழர்களுக்கு விரோதமாக வரும் வரவு செலவு திட்டத்தை தமிழர்தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பதாக இருந்தால் 

தமிழ் மக்களின்  பிரதிநிதிகள் என கூறிக்கொள்வதற்கு வெட்கப்படவேண்டும் எனவும் கூறினார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே 

சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்காக 29 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

அதுவே 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் வரவுள்ள நிலையில் அதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின் றது. 

போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதுகாப்புக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தேவையா? இந்த பணம் உண்மையில் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படுகின் ற சிங்கள மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும், 

தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கும், இராணுவம் பௌத்த பண்டிகைகளை நடாத்துவதற்கும் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப வேலை திட்டங்களையும் செய்து அதன் ஊடாக 

தமிழ் மக்கள் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்துடன் நெருக்கமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்ற படத்தையும் சர்வதேசத்திற்கு காட்டுவதே இந்த பாரிய நிதி ஒதுக்கீட்டின் நோக்கமாகும். 

ஏற்கனவே வடகிழக்கு மாகாண மக்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்கும் இராணுவம் பொய்யான படத்தை சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்கு இராணுவம் மற்றும் அரசாங்கம் விரும்புகிறது. 

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு விரோதமான 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை ஆதரிக்கபோகிறதா? என்பதே கேள்வி. அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்குமாக இருந்தால் 

கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு கூறியவை அனைத்தும் பொய்யானவை. அத்தோடு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் தாங்களே என கூறுவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக..

2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். அவர்கள் போராட்டம் நடாத்தும் ஒவ்வொரு சந் தர்ப்பங்களிலும் மாறி..மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை 

தாராளமாக வழங்கியபோதும் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை. மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தபோதும் பல விடயங்களை செய்வதாக கூறியபோதும் ஒன்றுமே செய்யவில்லை. 

குறிப்பாக விசேட நீதிமன்றம் அமைப்பதாக கூறி அமைத்தார்கள். ஆனால் அந்த நீதிமன்றங்களில் அரசியல் கைதிகளின் வழக்குகள் நடைபெற்றதாக தெரியவில்லை. இதேபோல் புனர்வாழ்வு வழங்கி விடுவிப்பதாக கூறினார்கள். அதுவும் நடக்கவில்லை. 

பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளும் காற்றில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது வழக்குகளை துரிதமாக விசாரித்து தம்மை விடுதலை செய்யவேண்டும். 

அல்லது தம்மை புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்யவேண்டும். என 2 அம்ச கோரிக்ஐ கயினை முன்வைத்து கடந்த 18 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உணவு ஒறுப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் i கதிகளின் உடல் நிலை மோசமானபோதும் இன்றளவும் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயம் போன்ற முக்கியமான விடயங்களிலாவது 

அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும். 

இராணுவத்திற்கும், அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு ஏற்புடையதல்ல..

இராணுவத்திற்கும், அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் வகையிலான பிரேரi ண ஒன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றில் சமர்பிக்கவுள்ளதாக செய்திகளை அறிகிறோம். இது ஏற்புடையதல்ல. 

இராணுவம் இந்த நாட்டில் போர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றது. அதனை ஐ.நாவின் 3 கொண்ட குழு உறுதிப்படுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு பாரப்படுத்தியுள்ளது. அது விசாரிக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளது. 

அதனடிப்படையில் தாம் அதனை விசாரிப்பதாக இலங்கை அரசும் இணங்கி ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் இராணுவத்தை பாதுகாப்பதற்காக அரசியல் கைதிகளுடன் இணைக்க அரசு முயற்சிக்கின்றது. 

இதற்காக ஜனாதிபதி சர்வதேசத்திடம் கூறுகிறார் எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோ மாம். மேலும் போரின் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு ஓடிவிட்டார். 

அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாட்டைவிட்டு ஓடிவிட்டார். அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிவிட்டார். நானே இறுதியில் போரை முடித்தேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். 

இவ்வாறான நி லையில் இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் நீதியை பெற்றுக் கொடுக்க ப்போவதில்லை என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு