SuperTopAds

பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் மத்திய கடற்றொழில் அமைச்சா்..

ஆசிரியர் - Editor I
பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் மத்திய கடற்றொழில் அமைச்சா்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மூவரையும் ஒக்ரோபர் முதலாம் திகதிமுதல் இடம்மாற்றம் செய்வதாக பணிப்பாளர் நாயகம் எமக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீஸ்காந்தராயா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  சுருக்குவலைக்கு  முற்றாகத் தடைவிதிக்குமாறும்    மாவட்டத்தில் பணியாற்றும் சர்ச்சைக்குரிய 3 உத்தியோகத்தர்களையும் உடனடியாக  இடமாற்றம் செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் வஜித அபயவர்த்தனா எமது முன்னிலையில் பணிப்பாளர் நாயகத்திற்கு கடந்த செப்ரெம்பர் மாதம் 19ம் திகதி மாவட்ட மீனவ அமைப்புக்கள் முன்பாக  உத்தரவிட்டார்.

இச் சந்திப்பில.  முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் பேதுருப்பிள்ளை - பேரின்பநாதன் .

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே   மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளிற்கும் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சருடன் தனித்தனியே சந்திப்புக்கள்  இடம்பெற்றன. 

அதிகாரிகளை மாற்றுவதுடன் சுருக குவலையை தடை செய்ய வேண்டும் போன்ற  இரு கோருக்கைகளுடன் மாவட டத்தின் 10 பிரதிநிதிகள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். .  குறித்த சந்திப்பிற்கு  கூட்டமைப்பின் தலைவர் ஏற்பாடு செய்து தந்திருந்தார் இதன் பிரகாரம்  கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரை இரு நாட்களாக நேரில் சந்தித்து  நிலமையை 

விளக்கி கூறப்பட்டது. இதில்  ஊழியர்களை மாற்றுவதாக  பணிப்பாளர் நாயகம் அதனை ஒக்ரோபர் முதலாம் திகதி நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்தார்.   இதேபோல்   உடனடியாக மாவட்டத்தில் வழங்கியுள்ள சுருக்குவலை அனுமதிகள் அனைத்தையும் இரத்துச் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இவற்றின் அடிப்படையில் சுருக்குவலை அனுமதிகளை தடைசெய்து உத்தரவு  மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இன்றுவரை  மீனவ சங்கங்களுடன் முரண்பாடாக உள்ள மூவரையும்  மாவட்டத்தை விட்டு இடமாற்றம் செய்யும் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. என்பது வருத்தமளிப்பதாகவே உள்ளது. என்றார்.