யாழ்.குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு..

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி  தாவூத் லெப்பை அப்துல் மனாப், இன்று  திங்கட்கிழமை பதவியேற்றார்.

குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியை  மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மலர்மாலை அணிவித்து யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்கு வரவேற்றார். 

யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மேல் நீதிமன்ற நீதிபதி  தாவூத் லெப்பை அப்துல் மனாப்புக்கு வரவேற்பளித்தனர். 

மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் உறுதியுரை எடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கருடன் இணைந்து மேல் நீதிமன்ற நீதிபதி  தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னெடுப்பார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றார்.  

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபில் என்.எம். மொகமெட் அப்துல்லாஹ், மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு