யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு நடவடிக்கை இல்லை..
யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது. என மாணவர் ஒன்றியம் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மா ணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தள்ளனர். இதன் போது அவர்கள் தெரிவித்ததாவது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகத்திற்குள் நடந்திருக்கின்றன. ஆனால் அதற்குரிய முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால்
அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் தப்பித்துச் செல்லக் கூடிய நிலைமைய காணப்படுகின்றது. குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இவ்வாறு மாணிவகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதே போன்றதொரு குற்றச்சாட்டு குறித்த பேராசிரியர் மீது கடந்த பல வருடங்களுக்கு முன்னரும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையிலையே இத்தகைய இழிவான செயற்பாடுகள்
தொடர்ந்தும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையினாலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் நிர்வாகத்திற்கும் மாணியங்கள் ஆணைக்குழுவிற்கும்
பேரவைக்கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் காணப்படுகின்றது. இவ்வாறு விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட் பேராசிரியர் தண்டணைகளுக்குள்ளாகாமல் தப்பித்துச் செல்கின்ற நிலைமையே காணப்படுகிறது.
இந்த நிலைமைகள் தொடர்வது எமக்கு மிகுந்த மனவேதனையையே ஏற்படுத்துகின்றது. ஆகவே பல்கலைக்கழக நிர்வாகம் இதனை மூடி மறைக்க முயலாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.