வறட்சியினால் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி..

ஆசிரியர் - Editor I
வறட்சியினால் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிக வரட்சியின் காரணமாக கால்நடைகளின் கறவையும்(பால்) குறைவடைந்தே காணப்படுவதாக  கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது நிலவும் அதிக வரட்சியின் காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு இ விவசாயப் பாதிப்புடன் இ கால்நடை உரிமையாளர்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். 

குறிப்பாக கால் நடைப் பண்ணை உரிமையாளர்கள் மாடுகளை மேய்ப்பதற்கு மேச்சல் தரைகள் அற்ற நிலையில் தனியார் நிலங்களில் உள்ள சொற்ப வசதி வாய்ப்பை பெற்று கால்நடைகளிற்கு உணவு வழங்குகின்றனர். 

இந்த நிலையில் தற்போதைய அதிக வரட்சியின் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வற்றியதனால் கால் நடைகளிற்கான உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துக் கானப்படுகின்றது. 

இதனையடுத்தே கறவை மாடுகளின் பால் சுரக்கும் தன்மையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முழங்காவில் பிரதேச கால் நடை உற்பத்தியாளரும் பால் சங்கம் ஒன்றின் தலைவரும் தகவல் தருகையில் எமது சங்கத்திற்கு உட்பட்ட அதாவது முழங்காவில் பிரதேசத்தில் தினமும் சராசரி 800 லீற்றர் பால் 

சாதாரணமான நாட்களில் பெறப்படுவது வழமையாகும். இருப்பினும் கடந்த மாத்த்தின் எந்த தினத்திலும் பால் பொள்வனவு 500 லீற்றரைத் தாண்டவில்லை என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு