முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் அல்ல.. ஆங்கில ஊடகத்திற்கு சுமந்திரன் கருத்து..
வடமாகாணசபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் அல்ல. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தான் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாப்பை மீறி செயற்பட்டுவிட்டார். எனவும் கூறியிருக்கின்றார்.
வடமாகாணசபையின் ஆயுள் காலம் 10ம் மாதம் 23ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாராவதா?
என பல்வேறு மட்டங்களில் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்பை நோக்கி கேள்விகள் எழுந்துவரும் நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தெரிவு செய்யப்படவில்லை. என கூறியிருந்த நிலையில் ஆங்கில ஊடக ம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய செவ்வியில் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஷ்வரன் அல்ல. அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாப்பை மீறிவிட்டார் என கூறியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.