ஆவா குழுவை அடக்க இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்க அரசு தயார்..

ஆசிரியர் - Editor I
ஆவா குழுவை அடக்க இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்க அரசு தயார்..

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இயங்கும் ஆவா குழுக்களை பூரணமாக ஒடுக்குவதற்கு இராணு வத்திற்கு பூரணமான அதிகாரங்களை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. என இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா கூறியுள்ளார். 

வடக்கில் செயற்படும் வன்முறைக்குழுக்களை ஒழிப்பதற்கு இராணுவத்தினருக்கு – குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கேனும் பொலிஸ் அதிகாரங்களை அரசு வழங்கவேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் மகேஸ் சேனாநாயக்க நேற்றுமுன்தினம் கண்டியில் வைத்து கருத்து வெளியிட்டிருந்தார்.

 இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே அஜித் பி.பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“இராணுவத்தளபதியின் கோரிக்கை நியாயமானது. இதற்கு முன்னரும் இராணுவத்தின் கோரிக்கையின் பிரகாரம் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவேஇ இது விடயத்திலும் விசேட அதிகாரங்கள் தேவைப்பட்டால் அதனையும் அரசு வழங்க தயாராகவே இருக்கின்றது.

நாட்டில் சட்டம்இ ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். அதைச் செய்யும் கடப்பாட்டைக் கொண்டுள்ள பொலிஸாருக்கும்இ இராணுவத்தினருக்கும் தேவையான உதவிகளையும்இ ஒத்ழைப்புகளையும் வழங்குவது அரசின் கடப்பாடாகும்” – என்றார்.

 அதேவேளைஇ ஆவா குழுவை ஒடுக்குவதற்கு இராணுவத்தினர் கோரும் அதிகாரங்களை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் வலியுறுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு