போருக்கு பின்னர் வவுனியா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 891 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
போருக்கு பின்னர் வவுனியா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 891 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது..

வவுனியா மாவட்டத்தில் போரிற்குப் பின்னர் இதுவரையான காலத்தில் 11 ஆயிரத்து 891 வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதுவரை வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையே மேற்படி எண்ணிக்கையாகும். 

இதில் பிரதேச செயலக ரீதியில் வவுனியா பிரதேச செயலகத்தின் கீழ் 4 ஆயிரத்து 918 வீடுகளும் , வவுனியா வடக்கு 2 ஆயிரத்து 777 வீடுகளும் , வவுனியா தெற்கு ஆயிரத்து 280 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதோடு 

செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 916 வீடுகளுமாகவே மொத்தம் 11 ஆயிரந்து 891 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட 11 ஆயிரத்து 891 குடும்பங்களில் 8 ஆயிரத்து 919 தமிழ் குடும்பங்களிற்கும் , ஆயிரத்து 756 முஸ்லீம் மக்களிற்கும் , ஆயிரத்து 216 சிங்கள மக்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இதேநேரம் வவுனியா தெற்கில் வழங்கிய ஆயிரத்து 280 வீடுகளில் ஆயிரத்து 216 வீடுகள் சிங்கள மக்களிற்கும் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்ட

2 ஆயிரத்து 916 வீடுகளில் ஆயிரத்து 128 வீடுகள் முஸ்லீம் மக்களிற்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு