SuperTopAds

யாழ்.பொது நூலகத்தில் உள்ள நினைவு கல்வெட்டை அகற்ற யாழ்.மாநகரசபையில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொது நூலகத்தில் உள்ள நினைவு கல்வெட்டை அகற்ற யாழ்.மாநகரசபையில் தீர்மானம்..

யாழ்ப்பாணம் பிரதான நூலகத்தில் உள்ள நினைவுக் கல்வெட்டு தவறான வரலாற்றை பதிவு செய்வதனால் அற்றப்பட வேண்டும். என்ற உறுப்பினர் ந.லோகதயாளனின் பிரேரணை தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் பிரதான நூலகத்தின் நுழைவாயில் உள்ள கல்வெட்டிலே 2003ம் ஆண்டில் வீ. ஆனந்தசங்கரி திறந்த்து வைக்கப்பட்டதோடு 

மாநகர சபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாக பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. உண்மையில் குறித்த நூலகம் மீளப் புனரமைக்கப்பட்ட பின்பு  முன்னாள் ஆணையாளர் 

இராமலிங்கமும் நூலகர்  தனபாலசிங்கமும்   இணைந்து ஓர் ஆண்டின் பின்பு 2004-02-  திறந்து வைக்கப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் சுண்டுக்குழியில் ஓர் இடத்தில்  தற்காலிகமாக  நூலகம் இயங்கியது. 

எனவே ஓர் மூத்த அரசியல் வாதியின் பெயரைப் பதித்து தவறான வரலாற்றை கூறும் அந்தக் கல் அகற்றப்பட வேண்டும். சபை தீர்மானிக்கும் பட்சத்தில் சரியான கல்லை வைக்கலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். 

இதற்கு முன்னாள் முதல்வரும் மற்றுமோர் உறுப்பினரும் எதிர்த்த நிலையில். இங்க அரசியல் வாதிக்காக இதனை எதிர்க்கவில்லை. 

ஆனால் தவறான வரலாற்றை பதிவு செய்தால் அந்த தவறான வரலாறு அடுத்த சந்த்திக்கு எடுத்துச் செல்லாது. சரியான வரலாறு எடுத்துச் செல்லப்பட வேண்டும். எனக் கோரிக்கை விடப்பட்டது.

இதன்போது குறித்த நூலகம் மீளப் புனரமைக்கப் பட்ட நிலையில் அப்போதைய மாநகர முதல்வர் செல்லன் - கந்தையாவின் காலத்தில் அக் கட்சியின் தலைவரை திறப்பு விழாவிற்கு அழைக்க வேண்டாம்.

 என மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் சார்பில் நேரில் சென்று கோரிக்கை விடப்பட்டது.்அதன்  தலைவர் என்ற வகையில் நானும் சென்றேன். இருப்பினும் எமது கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

இதனால் மக்களகத் திரட்டி மறியல்ப்போராட்டத்தையும் முன்னெடுத்தோம் இதன் காரணமாக குறித்த திகதியில் நூலகம் திறக்கப்படவில்லை. என்பதே உண்மையானது. இந்த நிலையில் நீண்ட காலத்தின் பின்னர்.

 எந்தவிதமான ஆரவாரமும் இன்றி திறக்கப்பட்ட நிலையில் அந்த கல்லில் உள்ளவர்கள் அப்போது கலந்துகொள்ளவில்லை. எனவே இந்த தீர்மானத்தை நான் வழி மொழிகின்றேன். 

என உறுப்பினர் சொலமன் சூசைப்பிள்ளை சிறில் உரையாற்றினார். இதனையடுத்து மாநகர முதல்வர் குறித்த விடயம் தொடர்பில் மாகாண சபையின் முறைப்பாட்டுக் குழுவிற்கு கிடைத்த கடிதம் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரமும் இவ்வாறே கூறுவதனால் உண்மை நிலமையை கண்டறிந்து அங்கே பொறிக்கப்பட்டுள்ள கல் தவறு என்றால் திருத்தம் செய்யப்படும்  என மாநகர முதல்வர் இ.ஆனலட் தெரிவித்தார்.