யாழ்.மாநகர முதல்வருக்கு வீடு கொடுப்பதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி எதிர்ப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வருக்கு வீடு கொடுப்பதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி எதிர்ப்பு..

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வருக்கான பிரத்தியோக வாசஸ்தலம் பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 6 ஆவது அமர்வு சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 

இதன் போது முதல்வர் தனது அறிவிப்புகளை விடுத்தார். இதன்படி தமக்கான வாசஸ்தல விபரங்களை விலை மதிப்பீட்டு திணைக்களம் தந்துள்ளனர்.

அவர்கள் தமது அறிக்கையில் மாதாந்த வாடகை கொடுப்பனவாக 30 ஆயிரம் ரூபாயும், குறித்த வாசஸ்தலத்தை சீர் செய்ய 2 இலட்ச்சத்து 90 ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளனர். 

இதனை சபைக்கு தெரியப்படுத்துகின்றேன் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஈபிடிபி உறுப்பினர்களான மு.ரெமிடியஸ், திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா 

மாநகர சபைக்கு  என நிரந்தமான வாசஸ்தலம் இருந்தால் மட்டுமே சபையின் நிதியை அதற்கு பயன்படுத்த முடியும். இதனை விடுத்து சபைக்கு உரித்து இல்லாத வாசஸ்தலத்துக்கு சபையின் நிதியை பயன்படுத்த முடியாது. 

அவ்வாறு நடந்தால் சபை உறுப்பினர்களே தங்கள் சொந்த நிதியை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவே எமது கடசியினர் யாரும் இதற்கு ஆதரவு இல்லை. எமது எதிர்ப்பினை பதிவு செய்கின்றோம் என்றனர்.

இதே போன்று கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முதல்வருக்கான வாசஸ்தல விடயம் முதலில் சபைக்கு கொண்டுவரப்பட்ட போது உறுப்பினர் வி.மணிவண்ணன் கடுமையாக எதிர்த்தார். 

அதன்படி முதல்வரின் அறிவிப்பில்  (நேற்று) கொண்டுவரப்பட்ட முதல்வருக்கான வசஸ்தல விடயத்தை முழுமையாக எரிர்க்கின்றோம் என்றனர்.

இதன் போது கருத்து தெரிவித்த முதல்வர் இங்கு யாரும் கட்சி ரீதியாக கதைக்க முடியாது. அனைத்துமே ஏனைய மாநகர முதல்வர்களுக்கு உள்ள விடயங்களையே நாம் இங்கும் கேட்க்கின்றோம். 

அத்துடன் எந்த சட்டத்துக்கும் முரணாக நாம் இதனை கேட்கவில்லை. இதனை விளங்காது எதிர்ப்பவர்கள் யாராயினும் ஒவ்வொருவராக பதிவிடலாம் என்றார். 

இதன்போது சபையில் இருந்த ஈபிடிபியினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னியினரும் தங்கையின் எதிர்ப்பினை பதிவு செய்வதாக தெரிவித்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு