யாழ்.மாநகர மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்த மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்த மாநகர முதல்வர்..

யாழ்ப்பாணம் மாநகர சபையயின் எல்லைக்குள் வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல அறிவிப்புக்களை மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 6 ஆவது அமர்வு சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.இந்த அமர்வில் சபை அறிவித்தல்களை அறிவிக்கும் போதே இவ்வாறான அறிவித்துகள்களை விடுத்துள்ளார்.

அவர் தனது அறிவித்தல்களில், யாழ் மாநகர எல்லைக்குள் வர்த்தக நோக்கில் அல்லது சேவை நோக்கில் நிரந்தமற்ற தங்குமிட சேவை மேற்கொள்பவர்கள் அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பில் பத்திரிகைகள் ஊடாகவும் அறிவிக்கப்படும்.மேலும் மாநகர சபை எல்லைக்குள் உணவுகள்,தின்பண்டங்கள் விற்பனை செய்வோர் சபையிடம் முறையாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான கால எல்லையும் அடுத்தமாதம் 30 ஆம் திகதி நிர்ணயிக்கப்படுகின்றது.அத்துடன் பண்ணைக் கடற்கரையில் உள்ள சிற்றுண்டிச் சாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளினை தூயபமையாக வைப்பதற்கும் 

மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைவதற்கும் ஏற்ற கருத்திடடா முன்மொழிவுகள் பகிரங்கமாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நகர கடைகளில் வியாபாரிகள் கடையின் எல்லைக்கு வெளியேயும் பொருட்களை காடசிப் படுத்துகின்றனர்.இதனால் நடைப்பதையால் செல்பவர்கள் அதிக சிரமங்களை மேற்கொள்கின்றனர்.

எனவே விற்பனையாளர்கள் அவ்வாறான செயல்களை நிறுத்த வேண்டும்.மீறும் சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சபை அமர்வுகளில் அறிக்கைகள் இனிவரும் காலங்களில் உறுப்பினர்களுக்கு முன் அஞ்சல் ஊடாகவே அனுப்பப்படும் ஏனெனில் அறிக்கை பிரதியிட அதிக செலவீனம் ஏற்படுகின்றது.

இதனை கரத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு