பளை- காற்றாலை சர்ச்சை தீவிரம் பெறும் நிலையில் சாவகச்சேரியில் மற்றொரு காற்றாலை அமைக்க திட்டம்..

ஆசிரியர் - Editor I
பளை- காற்றாலை சர்ச்சை தீவிரம் பெறும் நிலையில் சாவகச்சேரியில் மற்றொரு காற்றாலை அமைக்க திட்டம்..

சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு அலகு மின்சாரத்தை 10.90 ரூபாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும். தற்போது இலங்கையில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இலங்கை மின்சார சபை 20 ரூபாவைச் செலவிடுகிறது.

இந்த இரண்டு காற்றாலைகளிலும் மொத்தமாக 8 காற்றாடிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும், தலா 2.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 28 மில்லியன் டொலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேசிய அபிவிருத்தி வங்கி 3000 மில்லியன் ரூபாவை கடனாக வழங்கவுள்ளது.

எஞ்சிய நிதியை சீலெக்ஸ் பொறியியல் நிறுவனம் மற்றும் லங்கா வென்சேர்ஸ் நிறுவனம் என்பன முதலீடு செய்யும்.

ஐரோப்பிய தர நியமங்களுக்கு அமைய உருவாக்கப்படும் இந்தக் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம், 2019 நடுப்பகுதியில் இருந்து தேசிய மின் விநியோகத்துக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு