SuperTopAds

காலபோக உரமானிய வழங்கும் சுற்றறிக்கை செயல்திட்டம் இன்று இடம்பெற்றிருந்தது..

ஆசிரியர் - Editor I
காலபோக உரமானிய வழங்கும் சுற்றறிக்கை செயல்திட்டம் இன்று இடம்பெற்றிருந்தது..

பயம் இன்றி பயிர் செய்வோம் என்னும் தொனிப்பொருளில்2018/2019 ஆண்டுக்கான காலபோக உரமானிய வழங்கும் சுற்றறிக்கை செயல்திட்டம் இன்று விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றிருந்தநிகழ்வு 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த விவசாய பிரதி அமைச்சர் சிறந்த விவசாய துறை சார் வல்லுனர்களின் கடின உழைப்போடு குறுகியகால பரப்பினுள் பரந்தளவிலான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிரதிபலனாகவே காலபோக செய்கையை கருத்தில்கொண்டு இம்முறை விவசாய செய்கையாளர்களுக்கு உரிய தருணத்தில் உரமானியங்கள் வழங்குவதற்கு சிறந்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும், பயமின்றியவிவசாய செய்கைக்கு காப்புறுதிகள் வழங்கப்பட்டு, கொள்வனவுகள் அதிகரிக்கப்பட்டு உற்பத்திகளும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

வடக்கு கிழக்கிற்கு விவசாயிகளினது தேவைகளை சேவைகளாக முன்னெடுப்பதற்கு சிறந்த அமைச்சர் இந்த நாட்டு மக்களுக்கு  விவசாய அமைச்சர் கிடைத்திருப்பதாகவும்,அதற்காக இந்த உரிய கால நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் அமைச்சின் செயலாளர் விஜயரத்ன, அமைச்சின் மேலதிக செயலாளர் உப்புல் மென்டிஸ் கமநல திணைக்கள அபிவிருத்தி ஆணையாளர் விக்கரமசிங்கே, வடமாகாண கமநல சேவை நிலைய ஆணையாளர்கள், யாழ்மாவட்ட, கிளிநொச்சி, மற்றும் வவுனியா   மேலதிக அரசாங்க அதிபர் சுகுனரதி தெய்வேந்திரம், 

சுரேஸ்குமார், சத்தியசீலன்,வடமாகாண கமநலசேவைநிலையம், மற்றும் ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள்,வடமாகாண விவசாய சம்மேளன பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.