பளை காற்றாலை விவகாரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க தீர்மானம்..
பளையில் அமைந்திருக்கும் காற்றாலை விவகாரம் தொடர்பாக மாகாண கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அவதானித்ததன் அடிப்படையில் மாகாண பொதுக்கணக்குகள் குழு தயாரித்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
வடமாகாணசபையின் 132வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது பளை காற்றாலை விவகாரம் தொடர்பாக மாகாண கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையினை
கடந்த 2018.09.10ம் திகதி நடைபெற்ற மாகா ண பொதுக்கணக்குகள் குழுவில் ஆராய்ந்ததன் அடிப்படையில் பொதுக்கணக்குகள் குழுவினது அவனதானிப்புக்கள் அடங்கிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபைக்கு நேற்று சமர்பித்திருக்கின்றார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2014.03.19 ஆம் திகதிய ஒப்பந்தம் விவசாய அமைச்சில் இல்லையென்று அந்த அமைச்சின் செயலாளர்,
பிரதம செயலாளருக்கு எழுதியNP/MA/02/CSR/01 இலக்கம் கொண்ட 2018.09.18 ஆம் திகதிய கடித மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பானதாகக் குறிப்பிடப்பட்ட அமைச்சிலேயே இந்த ஒப்பந்தப் பிரதி இருக்கவில்லை என்ற நிலை காணப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் மாகாணசபை செயலக செயலாளரினாலேயே கையொப்பமிடப்பட்டுள்ளது. தங்கள து குறிப்பின் விடயம் 111 இன்படி பிரதம செயலாளரே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டருக்க வேண்டும்.
கடந்த ஐந்து வருட காலத்தில் சபைச் செயலாளர் ஒருவர் வேறு எந்த ஓப்பந்தத்திலும் ஒப்பமிடவில்லை. இவ் விடயமாக கௌரவ ஆளுநர் தாம் பெற்றுக்கொண்ட 2014.03.19 ஆம் திகதிய ஒப்பந்தத்தின் பிரதியில் எமக்கும்,
பிரதம செயலாளருக்கும் 2014.09.04 ஆம் திகதி எழுதிய குறிப்பிற்கு, அப்போதைய சபை செயல hளர் திரு.ஜி.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை இத்துடன் இணைக்கப்படுகின்றது. அன்றைய தினமே ஆளுநர் திரு.ஜி.கிருஸ்ணமூர்த்தியின் சேவையை முடிவுறுத்தியது
இன்னுமொரு விடயம். இந்த ஒப்பந்தத்தில் பல குறைபாடுகள், விதி மீறல்கள் காணப்பட்டன. முக்கியமாக கொழும்பில் ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டதாக இருந்தாலும் யாழ்ப்பாணத்திலேயே ஒப்பமிடப்பட்டது.
ஜீலி பவர் மற்றும் பீற்றா பவர் கம்பனிகள் சார்பில் இருவர் ஒப்பமிடுவதாகக் கூறப்பட்டாலும் இரண்டு கம்பனிகள் சார்பில் ஒருவரே ஒப்பமிட்டு ள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தமொன்று 07.11.2014 ஆம் திகதி பிரதம செயலாளரினால் ஒப்பமிடப்பட்டுள்ளது.
அதன் பிரதி இத்துடன் இணைக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்திலும் இரண் டு கம்பனிக ளின் சார்பாகவும் ஒருவரே ஒப்பமிடப்படுள்ளமை காணப்படு கின்ற து. 19.03.2014 ஆம் திகதியிலிருந்து இது அமுலுக்கு வரும் என்றே கூறப்படுகின்றது.
19.03.2014ஆம் திகதிய ஒப்பந்தத்தில் அமைச்சர் சபை “approve the lease and demiseunto the lessee the allotment of landMarked lot 1 to 19” என்றுள்ளது. எனி னும் 07.11.2014 ஆம் திகதிய
ஒப்பந்தத்தில் “party of the 2nd part 3rd parthave obtained necessary approval from the relevant authority for thelease of the allotments of land Marked Lot 1 to 19"என்றுள்ளது.
இரண்டிலும் “lease” குத்தகை என்ற சொல் பாவிக்கப்பட்டமையும் காணியின் இலக்கங்கள் ஒன்றாக உள்ளமையையும் காணலாம். முதலாவதில் குத்தகையை அங்கீகரிப்பதற்கு உடன் படுவதாக தெரிவிக்கும் அதேவேளை இரண்டாவதில் 2 ஆம், 3ஆம் பகுதியினரான
இரு கம்பனிகளும் உரிய அதிகாரிகளிடமிருந்து உரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக கூறப்படுள்ளது. இந்த விடயத்தை பரிசீலித்த பொழுது சம்பந்தப்பட்ட இரண்டு கம்பனிகளும் இக் காணிகளுக்கான குத்தகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை
மாகாண காணி ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளனர் (திகதி தெரியவில்லை) என்பதனை அறிய முடிகின்றது. மாகாண காணி ஆணையாளர் இவ் விண்ணப்ப ங்கள் இரண்டை யும் 05.12.2013ஆம் திகதி கௌரவ முதலமைச்சருக்கு அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்துள்ளார்.
அவை முதலமைச்சர் அலுவலகத்திற்கு 09.12.2013 இல் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் முதலாவது ஒப்பந்தம் கைச்சாத்திட்ட 19.03.2014 ஆம் திகதிய அன்றே கௌரவ முதலமைச்சர் தமது ஒப்புதலை (Consent) வழங்கியுள்ளார்.
இவ்வற்றின் அடிப்படையில் மத்திய காணி ஆணையாளர் பீற்றா பவர் கம்பனிக்கா ன அனுமதியை 25.05.2015 ஆம் திகதிய கடித மூலமும், ஜீலி பவர் கம்பனிக்கா ன அனுமதியை 10.09.2015 ஆம் திகதிய கடித மூலமும் மாகாண காணி ஆணையாளருக்கு
தெரியப்படுத்தியுள்ளார். இவற்றில் குத்தகை கட்டணம் அறவிடுதல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஒப்பந்தங்களிலும் குத்தகை காலம் 20 வருடம் என்றிருக்கையில் அங்கீகாரம் 30வருடங்களுக்கானதாக காணப்படுகின்றது.
இதில் முக்கியமாக கவனிப்பட வேண்டியது 07.11.2014 ஆம் திகதிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே காணிக் குத்தகை அங்கீகாரம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டவை மிகவும் தவறான வை என்பதாகும்.
இவ் விடயத்குரிய திரு.ஜி.கிருஸ்ணமூர்த்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் எதிர்ப்பில்லை” என்ற தேவையே இக்கம்பனிகளுக்கு இருந்திருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை மின்சாரசபைக்கு இங்கு உற்பத்தியாகும் மின்வலு வழங்கல் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இப்படி ஒரு திட்டம் பற்றி வெளிப்படையான கோரல்களை (Bids)கோரியிருக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி மாகாணசபையின் அங்கீகாரம் பெறப்படவில்லை. இது இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்பு ரை 154 கு (6) இற்கு முரணானது.
கூட்டு சமூகப் பொறுப்பு ஊளுசு தொடர்பான தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது எங்குமே குறிப்பிடப்படவில்லை. தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல இலங்கை மின்சார சபையிடம் பெற்றுக் கொள்ளக்கூடிய
வருமானத்தின் அடிப்படையில் பேரம் (டியசபயin) செய்திருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தங்களது அறிக்கையில் குறிப்பிடப்ப ட்டபடி 2014 டிசம்பர் முதல் 2016 டிசம்பர் வரையான இரண்டு வருட காலத்திற்கு
ரூபா 2933.81 மில்லியன் தொகையை இக் கம்பனிகள் வருமானமாகப் பெற்றிருக்கும் அதேவேளை மாகாண சபைக்கு ரூபா 40 மில்லியனே கிடைத்திருக்கின்றது. என குறிப்பிடப்பட்டு ள்ளது. இதேவேளை இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விடயங்களை முன்னாள்
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிராகரித்திருந்தார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சி வாஜிலிங்கம் இந்த விடயத்தை நிதி குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கவேண்டும் என கூ றியிருந்தார். இதேபோல் மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராஜா
மற்றும் இ.ஜெயசேகர ம் ஆகியோர் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த விடயமும் உள்ளடக்கப்பட்டு பொதுக்கணக்குகள் குழுவின்
அவதானிப்புக்கள் அடங்கிய அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.