புதுக்குடியிருப்பு- மந்துவில் சிவன் ஆலய காணி பிரச்சினை மீண்டும் குழப்பத்தில்..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு- மந்துவில் சிவன் ஆலய காணி பிரச்சினை மீண்டும் குழப்பத்தில்..

புதுக்குடியிருப்பில் உள்ள மந்துவில் மணற்குளம் மற்றும் சிவன் ஆலயத்திற்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையில் இருந்த காணிப்பிரச்சனை நீண்டகாலத்தின் பின்னர் நேற்று 25.09.18 அன்று பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் அவர்களின் முயற்சியிலும் 

இரு தரப்பினரையும் இணைத்து இணக்கப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது கோயில் வளாகத்திற்கான எல்லைப்படுத்தல் நடவடிக்கை நில அளவை திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு அதற்கான எல்லை கற்களும் போடப்பட்டுள்ளன.

இன்னிலையில் 25.09.18 அன்று கோவில் வளாகத்திற்கான எல்லைக்கற்களாக போடப்பட்ட மூன்று தூண்களும் மணற்குளத்தினை அடையாளப்படுத்தும் பெயர் தூணினையும் விசமிகள் உடைத்து நொருக்கியுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்த பகுதியில் விவசாயிகள் மத்தியிலும் ஆலய நிர்வாகத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மந்துவில் கிராம சேவகர் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழப்கரமாக சம்பமவம் குறித்து பிரதேச செயலாளரின் உத்தரவிற்கு அமைய கிராம உத்தியோகத்தரால் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய நிர்வாகத்தினரும் இச்சம்பவம் குறித்து பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார்கள்.

சம்பவம் குறித்து மேற்கொண்டு பொலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இதனை யார் செய்தார்கள் என்பது இரு தரப்பினர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வறான சம்பவம் இடம்பெற்றுள்ளது என இரு தரப்பாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு