சுமந்திரனின் வாத திறமையால் வழக்கை வாபஸ் பெறவில்லை, வழக்காளி விரும்பியே வாபஸ் பெற்றார்..

ஆசிரியர் - Editor I
சுமந்திரனின் வாத திறமையால் வழக்கை வாபஸ் பெறவில்லை, வழக்காளி விரும்பியே வாபஸ் பெற்றார்..

தன்னுடைய கட்சி காரர் தன்னிடம் எந்த சந்தர்ப்பத்திலும் வழக்கு வழக்கினை மீளபெற போவதாக கூறவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். 

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும் , வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

அந்நிலையில் தான் வழக்காளியின் சட்டத்தரணியிடம் இருந்து வழக்கு செலவினை பெற்றுக்கொண்டதாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் கேட்ட போது , 

வழக்கு விசாரணை நடக்கும் போது கூட எனது கட்சிகாரர் வழக்கினை வாபஸ் பெறவுள்ளதாக என்னிடம் கூறவில்லை. அதனாலயே வழக்கினை வாபஸ் பெற முடியாது என மன்றில் தெரிவித்தேன். 

நீதிபதி நேரடியாக வழக்காளியான எனது சட்டத்தரணியிடம் கேட்ட போது , தான் வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தார்.  ஆனால் என்னிடம் தான் வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக எந்த சந்தர்பத்திலும் கூறவில்லை. 

இதேவேளை சட்டத்தரணி சுமந்திரன் மன்றில் செய்த விண்ணப்பம் கராணமாக வழக்கு தள்ளுபடி செய்யும் நிலைக்கு சென்ற போதே தான் வாபஸ் பெற விரும்புவதாக கூறிய கருத்தை முற்றாக தான் நிராகரிப்பதாகவும் , வழக்காளி வழக்கினை வாபஸ் பெற விரும்பியதால் தான் வழக்கு தள்ளுபடி செய்யபட்டது என தெரிவித்தார். 

வழக்கு செலவு செலுத்தியமை தொடர்பில் கேட்ட போது , எனக்கு எந்த அறிவித்தலும் வழங்காமல் மன்றில் திடீரென வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை வழக்காளியே செலுத்த வேண்டும் எனுவும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு