SuperTopAds

நோயாளிகளுக்கு மருந்து சுற்றிக் கொடுப்பதற்கு கடதாசி கிடைக்கவில்லையா? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
நோயாளிகளுக்கு மருந்து சுற்றிக் கொடுப்பதற்கு கடதாசி கிடைக்கவில்லையா? மக்கள் கேள்வி..

அரசாங்க கிராமிய வைத்தியசாலைகளில் மருந்துகள் வழங்குவதற்குகூட போதிய வசதி வாய்ப்பு இன்மையால் வழங்கப்பட்ட மாத்திரைகள் எந்தவேளையில் உட்கொள்வது என்பதனை அனிந்துகொள்வதில்கூட சிரமத்தை எதிர்கொள்வதாக சுட்டிக் காட்டுகின்றனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பல வைத்தியசாலைகளில் கிராமிய வைத்தியசாலைகளும் உண்டு. அங்கே சிறு வைத்தியங்களிற்குற் சென்றால் வைத்தியர் துண்டை வழங்க மருந்து வழங்கும் இடத்தில் சிறிய என்பலப் வகை உறைகள் இன்மையால் பழைய பேப்பர்களில் சுற்றியே மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் மாத.திரைகளில் காலை 2 , மாலை 2 என எழுதினால் அது எப்போது சாப்பாட்டிற்கு முன்பா  அல்லது பின்பா  என்பது தெரியவில்லை. அதேபோல் சில கொப்பி பேப்பர்களில் வழங்கினால் அதில் வைத்தியசாலையில் எழுதிய இலக்கம் எது பேப் பேரில் இருந்த இலக்கம் எது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. 

எனவே வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இதற்கும் ஓர் சிறு நிதியை ஒதுக்கி சீரானதும் பாதுகாப்பானதுமான முறையில் வழங்க வேண்டும் என கடந்த வாரம் சுன்னாகம் பகுதியில் உள்ள கிராமிய வைத்தியசாலையில் மருந்தினைப் பெற்றுக்கொண்ட 56 வயதினையுடைய சு.புவி தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்பு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

எந்த வகையான வைத்தியசாலைகள் என்றாலும் நோயாளர்களிற்கு வழங்கப்படும் மாத்திரைகளை சீரான , பாதுகாப்பான உறைகளில் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் எந்தவிதமான எழுத்துக்களும் அற்ற புதிய வெள்ளைத் தாளில் மட்டுமே வழங்க முடியும்.

எனவே குறித்த விடயம் தொடர்பிலும் அடுத்த வாரம் கவனம் செலுத்தப்படும் என்றார்.