SuperTopAds

வடமாகாணத்தில் வைத்தியா்கள் பற்றாக்குறையுடன் இயங்கும் 120 வைத்தியசாலைகள்.. 340 வைத்தியா்கள் தேவை,

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் வைத்தியா்கள் பற்றாக்குறையுடன் இயங்கும் 120 வைத்தியசாலைகள்.. 340 வைத்தியா்கள் தேவை,

வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள 120 வைத்தியசாலைகளில் 340 வைத்தியர்களிற்கு பற்றாக்குனை உள்ளதாக வடக்கு மாகாண சுகாதாரத் தகவல்கள் உறுதி செய்கின்றன.

வடக்கு மாகாணத்தின் 120 வைத்தியசாலைகளினையும் முழுமையாக இயக்க வேண்டுமானால் ஆயிரத்து 153 வைத்தியர்கள் தேவை என ஆளணி அங்பீகாரம் உள்ளது. 

இருப்பினும் தற்போது வடக்கு மாகாணம் முழுமையாக 813 வைத்தியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் பிரகாரமே தற்போதும் வடக்கு மாகாணத்தில் 340 வைத்தியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஒரேயொரு போதனா வைத்தியசாலை உள்ளது. போதனா வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் உள்ளது. ஏனைய அனைத்தும்  மாகாண அரசின் கீழ் உள்ளவை.

இதன் பிரகாரம்  வடக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு உட்பட்ட வைத்தியசாலைகளிற்கு  851 வைத்தியர்கள் தேவையாகவுள்ள நிலையில்   தற்போது 582  வைத்தியர்கள் மட்டுமே பணியில்  உள்ளனர்.

இதன் பிரகாரம். வடக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில்  269  வைத்தியர்கள் பற்றாக்குறையாகவே உள்ளனர். 

அதேபோன்று மத்திய அரசின் கீழ் உள்ள  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு   302 வைத்தியர்கள் தேவையாகவுள்ள நிலையில்  தற்போது 231   வைத்தியர்கள் மட்டுமே  உள்ளனர்.  

இவற்றின் அடிப்படையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் 71  வைத்தியர்கள் பற்றாக்குறையாகவே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

போர் முடிவுற்று 9 ஆண்டுகளின் பின்பும் வடக்கு மாகாண சுகாதாரத் துறையை இன்றுவரை முழுமை செய்ய முடியாமலேயே அரசு இன்றுவரை உள்ளது.