சர்கார் படத்தில் வரும் 24ல் வெளியாகும் முதல் பாடல் இதுதான்

ஆசிரியர் - Admin
சர்கார் படத்தில் வரும் 24ல் வெளியாகும் முதல் பாடல் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் 3வது படம் ‘சர்கார்’. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் அதிரடி அறிவிப்பை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அதாவது வரும் 24ஆம் தேதி சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளிவருகிறது. இந்நிலையில் என்ன பாடல் வெளியாகப் போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சர்கார் படத்தில் இருந்து வெளியாகும் ஃபர்ஸ்ட் டிராக் பாடல், படத்தின் அறிமுகப் பாடல் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது படத்திற்கு இடையே வரும் எழுச்சிகரமான பாடல் ஆகும்.

நடப்பு அரசியல் அவலங்களை கூறும் வகையில் வரிகள் இடம்பெற்றிருக்கும். இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால், பொறுத்திருந்து தெரிந்து கொள்வோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு