சிறந்த நடிகருக்கான சர்வதேச IARA விருதுக்கு விஜய் தேர்வு

ஆசிரியர் - Admin
சிறந்த நடிகருக்கான சர்வதேச IARA விருதுக்கு விஜய் தேர்வு

சிறந்த நடிகருக்கான சர்வதேச ஐரா விருதை மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் தட்டிச் சென்றார். இந்த விருதை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமை அவரை மட்டும் சேரும்…!

நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் 2017 வெளியான திரைப்படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். எஸ்.ஜே. சூர்யாஇ நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடத்திருந்தனர்.

இந்தப் படத்தில் 3 கதாப்பாத்திரங்களில் நடித்த விஜய், அபாரமான நடிப்பால் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தார். இசைப்புயல் கொடுத்த ஆழப்போரான் தமிழன் பாடல் இந்த படத்துக்கு மேலும் மெருகேற்றியதுடன், அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் கீதமாக இசைத்தது.

படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனங்களை விஜய் பேசியதற்கு, பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஹெச். ராஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் படத்துக்கு தமிழக மட்டுமின்றி உலக அளவில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில், ஐஏஆர் சர்வதேச விருதுக்கு சிறந்த நடிகர் பிரிவில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது, 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது விஜய் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். உலக அளவில் 8 நடிகர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகராக விஜய் தேர்வாகி, இந்திய அளவில் இந்த விருதை பெறும் முதல் நடிகர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு