வனஜீவராசிகள் திணைக்களத்தினால் திரும்பிபோகும் 1800 மில்லியன் ரூபாய் நிதி..

ஆசிரியர் - Editor I
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் திரும்பிபோகும் 1800 மில்லியன் ரூபாய் நிதி..

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்குப் பகுதியில் இறால் மற்றும் நண்டு வளர்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி  1800 மில்லியன் ரூபா பணம் வனஜீவராசி திணைக்களத்தின் செயல்பாட்டினால் திரும்பிச் செல்லும் ஆபத்து காணப்படுவதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் கடந்த யூலை 22 ம் திகதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையிலும் இன்றும் எந்தவிதமான ஓர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கு கடந்த 22ம் திகதி வருகை தந்த   கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்சா  தலமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சணை தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  உரையாற்றும்போதே மேற்படி விடயத்தை  தெரிவித்தார்.

அதில் மன்னார் மாவட்டத்தில் அதிக கடல் பிரதேசமும் வளர்ப்புத் திட்டங்களிற்கு உகந்த பகுதிகளும் காணப்படுகின்றன. இதிலே மாந்தை மேற்கில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் கடற்கரை  நிலப்பரப்புக்கள் உள்ளது. இதிலே இலங்கையிலேயே அதிகமாக கடல் வாள் உயிரிணங்கள் வளர்க்க உகந்தபகுதிகள் இங்குதான் உள்ளது. இவ்வாறு கடல்வாள் உயிரிணங்களில் இறால் மற்றும் நண்டு போன்றவை அதிகம் வளர்க்ககூடிய பிரதேசம் இது. இருப்பினும் இந்த 60 ஆயிரம் நிலப்பரப்பில் மிகவும் உகந்த பகுதியாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.

இவ்வாறு 20 ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் வெறும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் மீனவர்களிற்கு 50 ஏக்கரிற்கும் உட்பட்ட நிலத்தை வழங்கி இறால் வளர்ப்பு நண்டு வளர்ப்பு போன்ற திட்டத்திற்காக எமக்கு ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி 2016ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டபோதும் இன்றுவரை அந்த திட்டத்தின் ஆரம்ப பணியைக்கூட மாவட்டத்தில் மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நிதி கிடப்பில் பயன்பாடு அற்ற நிலையிலேயே இருப்பதாக குறிப்பிட்டார்.

அவ்வாறு அந்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியாதவாறு நிதி கிடைக்குமா? அல்லது இல்லாமல் போகுமா என்ற நிலமைக்கு காரணம் இந்த திட்டத்திற்காக  சிபார்சு செய்யப்பட்ட  3 ஆயிரத்து 500 ஏக்கர். உட்பட 22 ஆயிரம் ஏக்கர். நிலம் முழுமையாக தமதுக்குச் சொந்தமானது என வன ஜீவராசிகள் திணைக்களம் அரசிதழ் வெளியிட்டமையினால் எவருமே அப்பகுதிக்குள் நுழைய முடியாத தன்மை காணப்படுகின்றது.

எனவே இந்த இறால் மற்றும் நண்டு வளர்ப்பிற்கு உகந்த பிரதேசத்தை விடுவிக்க  ஆவண செய்ய வேண்டும் எனக் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலத்தினை விடுவிக்குமாறு நான் ஏற்கனவே மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் ஊடாக குறித்த அமைச்சிற்கு கடிதம் வழங்கியிருந்தேன். இருப்பினும் இன்னுவரை எந்த முன்றேற்றத்திற்கும் வனஜீவராசிகள் அமைச்சு முன்வரவில்லை. 

இதனால் மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமத்தின் மத்தியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயிரத்து 800 மில்லியன் ரூபா பணம் இன்னும் 2 மாதகாலத்தில் திரும்பிச் செல்லும் நிலமையே காணப்படுகின்றது. எனவே குறித்த நிதி திரும்பிச் செல்லும் நிலமை ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பை மட்டுமல்ல முழுப்பழிச் சொல்லினையும் அமைச்சும் அதன்  திணைக்களப் பணியாளர்களுமே ஏற்கவேண்டும். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு