நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது என்று - தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முன்னாள் மூத்த போராளி மு. மனோகர் (காக்கா அண்ணா )இன்று 23.09.2018 மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இவ் விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென காக்கா அண்ணா விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார்.
திலீபன் நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸ் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது எனக் காக்கா அண்ணா தெரிவித்த கருத்தை அவர் நிராகரித்தார்.
எப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் இந் நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என காக்கா அண்ணா சுட்டிக்காட்டினார்.
அன்றைய நினைவு நிகழ்வின நிகழ்ச்சி நிரல் பற்றி மாவை கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் காக்கா அண்ணா பதிலளித்தார்