பிரபாகரனை நான் எதிர்கிறேன் அதற்காக பிரபாகரனை காட்டி கொடுத்தவன் அல்ல நான்..
பிடித்து வைத்திருந்த தன்னுடைய தம்பியைப் பாதுகாப்பதற்கு கோட்டபாயவோட டில் போட்டவர் தான் கஜேந்திரன். அவரைப் போன்று நான் புலியைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஆகவே என்னைப் பற்றிக் கதைப்பதற்கு கஜேந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு ஈழமக்கள் ஐனநாயகக் கட்சின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்ற போது தமிழிழ விடதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை விசயந்து எனக் கூறியதற்கு ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அவர் ஒரு துரோகி என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்..
இந்திய ஊடகங்கள் என்னிடம் பேட்டி பிரபாகரன் இறந்ததற்க நீங்கள் கவலைப்படவில்லையா என்று கேட்டார்கள். இந்தக் கேள்வியை என்னென்று என்னிடம் நீங்கள் கேட்க முடியுமென்று நான் கேட்டிருந்தேன். என்னுடைய உறவை எனக்கு நெருக்கமான ஆட்களைக் கொன்றது கடத்தியது அல்லது இன்றைக்கு இந்த மக்களுக்கு இந்த அவல நிலையை ஏற்படுத்தியது பிரபாகரன். ஆகவே நான் என்னென்று அவர் இறந்ததற்கு அனுதாபப்பட முடியும் என்று சொல்லியிருந்தேன்.
நான் அதனை இன்று நேற்றா இதனைச் சொல்லியிருக்கின்றேன். நான் நீண்டகாலமாகவே அதனைத் தானே நான் சொல்லி வருகின்றேன். இதனைச் சொல்ல நான் ஏன் பயப்பிட வேண்டும். நான் மற்றவர்கள் போன்று புலியை காட்டிக் கொடுக்கவில்லை. என்னுடைய கருத்தையே வெளிப்படுத்தி வருகின்றேன்.
நான் துரோகியா இல்லையா என்பதை மக்கள் தானே தீர்மானிக்க வேண்டும்.
இன்றைக்கு இருக்கிற தமிழ் நாடாளுமன்ற உறுபினர்களில் நான் தான் மூத்தவன். அதாவது தொடர்ந்து 25 வருடமாக இருக்கிறேன். சம்மந்தனோ மாவையோ இடையில் நிறுத்தப்பட்டே வந்தனர். ஆனால் நான் தொடர்ச்சியாக இருக்கிறேன். வடகிழக்கில் தமிழ் உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் நாடாளுமன்றத்தில் நான் தான்.
ஆகவே என்னைப் பற்றிப் பேசுவதற்கு குதிரைக் கஜேந்திரனுக்கு அந்தத் தகுதியில்லை.
குதிரை கஜேந்திரன் உசுப்பேத்தி பாராளுமன்றத்தில் எல்லாம் கதைப்பான். 40 ஆயிரம் சவப்பெட்டியை தயாரியுங்கள் என்று சொல்லிப் போட்டு அவன் வெளிநாட்டுக்கு ஓடிப் போனான். அதற்கு பின்னர் திருமணம் செய்து இங்கு பிரச்சனை எல்லாம் முடிய மீள வந்திருக்கிறார். ஆனால் அவ்வாறு இலங்கை வர முன்னர் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஐபக்சவோடு ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தியிந்தார்.
அதாவது தன்னுடைய தம்பியை விடச் சொல்லியும் தான் கூட்டமைப்பை உடைக்கிறன் என்றும் தப்பியிருக்கிற புலிகளை காட்டித் தாறன் என்றும் ஒரு டீலைப் போட்டிருந்தார். இது தான் அவர் கோட்டாபாவோடு கண்ட இணக்கம். அப்படியானவருக்கு என்னைப்பற்றிப் கதைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது.
மேலும் புலிக்கு விசுவாசி என்று சொல்லி மக்களை உசுப்பபேத்தி விட்டுட்டு வெளிநாடு ஓடிச் சென்றாய்தானே.
அத்தோடு இங்க வரி கட்ட வேண்டும் என்று சொல்லி போட் வாகனத்தை விற்றுப் போட்டு புலிகளுக்கு காசை கொடுக்காமல் இருந்தவர் தானே. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி இல்லை. ஆனாலும் புலிகளிட்ட அப்பிடி சொல்லிப்போட்டு இவரும் பத்திமினியும் இன்னொருளாலும் அந்தக் வாகனத்தை கொழும்பில் விட்டுவிட்டு இப்ப வந்து எடுத்து விற்றனர்.
இந்த வாகத்தை 40 இலட்சத்திற்கு விற்றுப் போட்டு மணற்தரையில் காணி வாங்கி வீடுகட்டியுள்ளார். நான் அப்படிச் செய்யவில்லை. தெருவில் போகும் போது எத்தனையோ நாய்கள் குரைக்கும் எல்லாத்திற்கும் கல்லு விட்டு எறிந்து கொண்டிருக்க முடியமா.இவரின் தம்பியை பிடித்ததால் கேர்டாவோட டில் போட்டிருந்தார். ஆனால் நான் அப்படி டில் போடவில்லை.
வெளிப்படையாக என் கருத்தை கூறுகிறன் மற்றவர்கள் போல புலியைக் காட்டிக் கொடுக்கவில்லை. புலி என்னைத் தேடி வந்தது. நான் புலியை தேடிப் போகவில்லை. என்றார்.