இராணுவ இருப்பை அரசு ஊக்குவிக்குமானால் நல்லிணக்கம் முறிவதை யாரும் தடுக்க முடியாது..

ஆசிரியர் - Editor I
இராணுவ இருப்பை அரசு ஊக்குவிக்குமானால் நல்லிணக்கம் முறிவதை யாரும் தடுக்க முடியாது..

வடக்கில் இராணுவம் தொடர்ச்சியாக தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் அன்றுடன் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் .மாவட்டத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்குஅரசாங்கம் பணம் வழங்க வேண்டுமென்றும் யாழ்ப்பாண கோட்டையை படையினருக்கு தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியுமென யாழ் மாவட்ட இரானுவத் தளபதி வெளியிட்ட கருத்து இது தொடர்பாக கேட்ட போதே  சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈது விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதை கூறியுள்ளார். ஆனால் இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கூறும் புள்ளிவிபரத்திற்கும் இராணுவ தளபதி கூறியிருப்பதற்கும் இடையிலே முரண்பாடு உள்ளது.

அதே நேரம் மக்களது காணிகளை விடுவிக்க நஸ்ரஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் கேக்குறேன் யாருக்கு யார் ? எதற்கு பணம் கொடுக்க வேண்டும். மிக நீண்ட வருடங்களாக மக்கள் தமது நிலங்களையும் வீடுகளையும் இழந்துவிட்டு அவர்கள் நிர்க்கதியாக நிற்கும் நிலையில் உங்களுக்கு எதற்கு பணம் வழங்க வேண்டும் ?.

எங்களை பொறுத்த வரையில் இராணுவமானது பௌத்த சிங்கள இராணுவமாகவே உள்ளது. ஏனெனில் நாட்டில் 3ல்2வீத  இராணுவத்தை வடக்கிலேயே வைத்திருக்கிறீர்கள். அதே நேரம் தெற்கிலே இராணுவ முகாமில் குண்டு வெடித்தாலும், குப்பை மேட்டில் குப்பை சரிந்து வீழ்ந்தாலும் பல இலட்சம் ரூபா செலவில் நஸ்ர ஈடு கொடுக்கிறீர்கள்.  இவை அனைத்தும் செய்யப்பட வேண்டும். 

ஆனால் நாம் மாத்திரம் அடிமை இனம் என்ற சிந்தனையில் நீங்கள் செயற்படுவதனூடாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. அதே நேரம் இராணுவம் யாழ்.கோட்டையை கேக்கின்றது. அக் கோட்டை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவுள்ளது. போர்த்துக்கேயர், ஆங்கிலேயேர் தற்போது இராணுவமும் அதனை ஆக்கிரமிக்க முயல்கின்றது. 

அக் கோட்டை என்பது தொல்லியல் அருங்காட்சியமாக மாற்றப்பட வேண்டுமே தவிர அதில் இராணுவ முகாம்களை அமைக்க முடியாது. அவ்வாறில்லாது தொடர்ச்சியாக இராணுவ முகாம்களை அமைக்க முயன்று தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பை நிலை நிறுத்த முனைந்தால் அன்றைய தினத்துடனே தேசிய நல்லிணக்கம் என்பது முற்றாக அழிந்து விடுவதுடன் எமது மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய நிலை உருவாகும் 

என்பதை இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தெரிவித்துக்கோள்கின்றோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு