இராணுவத்திற்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்கூடாது..

ஆசிரியர் - Editor
இராணுவத்திற்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்கூடாது..

வடக்கில் பொது மக்களது காணிகளில் உள்ள இராணுவம் அதிலிருந்து வெளியேறுவதற்கு பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிப்பதானது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடு என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனி தமிழ் மக்களை இனவழிப்பு செய்த இராணுவத்திற்கு கோட்டை மட்டுமல்ல ஒர் அங்குல நிலம் கூட வழங்க்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்குஅரசாங்கம் பணம் வழங்க வேண்டுமென்றும் யாழ்ப்பாண கோட்டையை படையினருக்கு தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியுமென யாழ் மாவட்ட இரானுவத் தளபதி வெளியிட்ட கருத்து இது தொடர்பாக கேட்ட போதே  மேற்படி கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களது காணிகளில் உள்ள இராணுவமானது ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்பதுவே அனைத்து தமிழ் மக்களதும் கோரிக்கையாகவுள்ளது. இதனையே தமிழ் தலமைகள் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாற நிலையில் மக்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப அக் காணிகளிலிருந்து வெளியேற வேண்டியதே இராணுவத்தின் கடமையாகும்.

இதனை தவிர்த்து தாம் வெளியேற பணம் தர வேண்டும் அது தர வேண்டும் இது தர வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து மக்களை அச்சுறுத்துவதானது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். அத்துடன் வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்திக்கு ஒதுக்கும் பணத்தை இராணுவத்திற்கு வழங்கவும் கூடாது.

மேலும் யாழ்.கோட்டை என்பது தொல்லியல் சான்றாகும். அதனை இராணுவத்திற்கு வழங்க முடியாது. கோட்டை மாத்திரமல்ல ஒர் அங்குலம் எமது நிலம் கூட தமிழர்களை இனவழிப்பு செய்த இராணுவத்திற்கு வழங்க முடியாது என்றார்.

Radio
×