வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளுக்கு ஸார்ப் நிறுவனத்திற்கு ஜப்பான் நிதி உதவி..

ஆசிரியர் - Editor I
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளுக்கு ஸார்ப் நிறுவனத்திற்கு ஜப்பான் நிதி உதவி..

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப்  நிறுவனத்திற்கு 625இ000 அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதற்கான மானிய ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா ஸார்ப் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப் கேணல் வீ.எம்.எஸ் சரத் ஜெயவர்த்தன ஆகியோர் 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கைச்சாத்திட்டனர்;.

கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பானதாக மாற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இத்திட்டம் பங்களிக்கின்றது.

இம்மானிய உதவி குறித்து ஸார்ப் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப் கேணல் வீ.எம்.எஸ் சரத் ஜெயவர்த்தன கருத்து தெரிவிக்கையில் 

'ஸார்ப் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு கண்ணிவெடியகற்றும் பணிகளை ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஆரம்பித்தது.தற்போது மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக      உதவியினை பெற்றுக்கொண்டுள்ளது.

இந் நிறுவனம் தொடர்ந்து தனது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவி வழங்கிய ஜப்பான் நாட்டிற்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.

இவ் வேளையில் அனுசரணையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய வகையில் ஸார்ப் நிறுவனம் செயற்படும் என்பதையும் உறுதியளிக்கின்றேன்.

ஜப்பானிய மக்களின்  இந் நிதியுதவியானது நாட்டிலுள்ள மிகவும் வறிய சமூகங்களின் மத்தியிலும் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டோர் மத்தியிலும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கும் எனவும் இந்நிறுவனத்தில் மொத்தம் 117 ஊழியர்கள் கடமையாற்றுவதாகவும் 

ஜப்பான் அரசாங்கத்தின் இந் நிதியுதவியூடாக அவர்களது வாழ்க்கைதரம் உயர்வடைகின்றதாகவும் தெரிவித்த இந்நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர்  ஓய்வு பெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ இவ்வேளையில் ஜப்பான் நாட்டிற்கு இந்நிறுவன ஊழியர்கள் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம் எனவும் கூறினார்..

மேலும்இ அவர் ஸார்ப 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஆறு இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து தொளாயிரத்து நாற்பத்து நான்கு(628,944Sqm) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து பத்தாயிரத்து அறுபத்து ஏழு(10,067) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு