வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரத்தை களவாடிய கர்பவதி பெண் கைது..

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரத்தை களவாடிய கர்பவதி பெண் கைது..

தெல்லிப்பளை வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை ஒன்றிற்கு வந்த முதியவரிடம் ஊழியர் போன்று பாசாங்கு செய்து முதியவரின் இரண்டு தங்க மோதிரத்தை அபகரித்துக்கொண்டு தப்பியோடிய கர்ப்பவதிப் பெண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த சிகிச்சைக்காக நேற்றைய தினம்   முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த சமயம் வைத்தியசாலையில் வெள்ளை உடுப்புடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் அங்கே நின்று முதியவரை அழைத்துச் சென்றுள்ளார். 

அதனை அவதானித்த பலரும் வைத்தியசாலைப் பணியாளரே அழைத்துச் செல்வதாக எண்ணியுள்ளனர். இந்நிலையில் முதியவரை அழைத்துச் சென்ற 30 வயது கர்ப்பவதி முதியவரின் கைளில் இருந்த இரு தங்க மோதிரங்களையும் அபகரித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். 

இதனையடுத்து முதியவர் குரல் எழுப்பிய நிலையில் குறித்த கர்ப்பவதி வேகமாக வெளியேறி வீதியால் பயணித்த பேரூந்தில் ஏறித் தப்பியுள்ளார். இதனையடுத்து முதியவர் அங்கு நின்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.

இதனையடுத்து அங்கே நின்ற சில இளைஞர்கள் பேரூந்தினை விரட்டிப் பிடித்து குறித்த பெண்ணை மடக்கினர். இதனையடுத்து இணுவிலைச் சேர்ந்த குறித்த பெண்ணை வைத்தியசாலைப் பொலிசார் கைது செய்த நிலையில் முதியவரின் இரு தங்க மோதிரங்களும் மீட்கப்பட்டது. 

குறித்த பெண்  தெல்லிப்பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு