இராணுவம் செய்யும் உதவிகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல..

ஆசிரியர் - Editor I

இராணுவம் மக்களுக்கு செய்யும் சேவைகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நாம் செய்யும் சேவைகள் அரசியல் நோக்கம் கொண்டதோ, அல்லது யாரையும் ஏமாற்று ம் நோக்கம் கொண்டதோ அல்ல. 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,  யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவம் தெற்கில் உள்ள தொண்டு அமைப்புக்களுடன் இணைந்து வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள், 

மதங்களுக்கிடையிலான நல்லிணக்க திட்டங்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் அமைக்கும் திட்டங்கள், வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத் துக் கொடுக்கும் திட்டங்கள், மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், 

அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்கும் செயற்றிட்டங்கள் என பல்வேறு செயற்றிட்டங்களை இன்றளவும் செய்து வருகின்றது. இதேபோல் 10 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளார்கள், 

10 ஆயிரம் மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்களின் பயந்தயம் போன்றவற்றை நடாத்தவும் இராணுவம் தீர்மானித்துள்ளது. 

இவ்வாறு இராணுவம் மக்களுக்கு செய்யும் உதவி திட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டதோ அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. 30 வருடங்கள் இந்த நா ட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களை 

கண்கூடாக பார்த்து அதன் அடிப்படையில் செய்யப்படும் உதவிகளாகும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்குவ தற்கு முயற்சிக்கின்றார்கள். 

அதன் ஒரு பாகமாகவே இந்த உதவித்திட்டங்கள் அமையும். எ னவே நாம் வழங்கும் உதவி திட்டங்கள் தொடர்பாக சில ஊடாகங்கள் தவறான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது. 

உண்மைகளை அல்லது சரியானவற்றை சரி யானவையாகவும், உண்மையானவையாகவும் மக்களிடம் சொல்லுங்கள். அதேசமயம் இராணும் எதாவது பிழைகள் புரிந்தால் அல்லது தவறான நடத்தைகளில் ஈடுபட்டால் அல்லது இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 

நடந்து கொண்டால் அவை குறித்தும் நேரடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள் அவ்வாறான வர்களுக்கு இராணுவத்தில் தக்க தண்டணைகள் வழங்கப்படும். மேலும் நான் தெற்கில் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கி ய செவ்வியில் மிக தெளிவாக கூறியுள்ளேன். 

வடக்கு மக்கள் குறித்தும், வடக்கு குறித்தும் தெற்கில் கூறப்படும் கருத்துக்களை அப்படியே நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ளவடக்குக்கு வாருங்கள், அங்குள்ள மக்களுடன் இயல்பாக பேசி உண்மைகளை அறியுங்கள் என்றும் கூறினேன். 

ஆகவே ஊடகங்கள் உண்மையை, நல்லவிடயங்களை நல்லபடியாக மக்களுக்கு சொல்லுங்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு