யாழ்.கோட்டையை தந்தால் மக்களின் காணிகளை விடுவிக்கலாம்..

ஆசிரியர் - Editor
யாழ்.கோட்டையை தந்தால் மக்களின் காணிகளை விடுவிக்கலாம்..

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்குமாறு தொல்லியல் திணைக்களத்திடம் நாங்கள் கேட் டுள்ளோம். அவ்வாறு யாழ்.கோட்டை இராணுவத்திற்கு தரப்பட்டால் யாழ்.மாவட்டத்தில் இராணுவ த்திடம் உள்ள மக்கள் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படும். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கோட்டை தொல்லியல் திணைக்களத்தின் ஆழுகைக்குள் இருந்து கொண்டிருக்கின்றது.  அங்கே இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதன் ஊடாக மக்களுக்கு சொந்தமான காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி 

மக்களுக்கு காணிகளை வழங்கலாம். மேலும் இராணுவத்தை முழுமையாக அங்கு நகர்த்த இயலும். இது தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக் கின்றோம். அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தால் 

இராணுவத்தை கோட்டைக்குள் நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Radio
×