‘மக்களவை தேர்தலுக்கு தயாராகி விட்டோம்’-கமல்

ஆசிரியர் - Admin
‘மக்களவை தேர்தலுக்கு தயாராகி விட்டோம்’-கமல்

கேள்வி கேட்போரை தாக்குவது என்பது அரசியலில் மாண்பு இல்லை என மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி….!

அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை என்று தமிழிசை சவுந்தரராஜனை கேள்வி கேட்ட அட்டோ ஓட்டுநரை பா.ஜ.கவினர் தாக்கியது குறித்து கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியல்இ சினிமா என கமல்ஹாசன் பிசியாக உள்ளார். சமீபத்தில் தனது மக்கள் நீதி மய்யத்தின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். தற்போது தமிழகத்தில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்றும் நாளையும் கோவைஇ திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்இ “மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அரசியல்வாதிகளிடம் மக்கள் கக்றிவ கேட்பது ஜனநாயக உரிமை கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்இ அதற்காக தாக்குவது மாண்பு அல்ல” என்று பேசினார்.

Radio
×