வடமராட்சியில் பொலிஸாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல்..

ஆசிரியர் - Editor I
வடமராட்சியில் பொலிஸாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல்..

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸாரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடிரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் தாம் அழைத்துச்சென்றனர் . 

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப் பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக பொலிஸார் மீட்டுச் சென்றனர் .

ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது போதிலும் அங்கிருந்து பொலாஸார் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அங்கு நின்ற அப் பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸாரும் பலரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு