தமிழீழ எழுச்சி நாள் "பொங்குதமிழ்" பிரகடனம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரைநீக்கம் செய்து வைத்தார். 

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை,  மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி  சர்வதேச சமூகத்தை தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்கும் வகையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடனம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பலகையை  அழகுறத் தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது. 

புனரமைக்கப்பட்ட தூபியே இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்  கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மங்கள விளக்கேற்றி தூபியைத் திறந்து வைத்தார். நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு