கிளிநொச்சியில் இராணுவம் செய்த கபட வேலைக்கு முடிவு கட்டப்பட்டது..
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி நகரில் இராணுவம் அமைத்திருந்த மதில் சுவர்கள் இன்று இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிகழ்ந்ததன் பிற்பாடு கிளிநொச்சியினுடைய கலாச்சார பண்பாட்டு மண்டபம் மற்றும் சந்திரன் பூங்கா ஆகிய பகுதிகளில்
பொலநறுவை காலத்தான் என குறிப்பிடப்படுகின்ற மிக தொன்மைவாய்ந்த கற்கள் கொண்டு வந்து மதில்கள் அமைக்கப்பட்டு அவை சிதைக்கப்பட்டு மிக நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது போல் ஒரு இருப்பினை இராணுவம் செய்திருந்தது.
ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு கோத்தபாயராஜபக்ச காலத்தில் நிறுவப்பட்ட கட்டிடங்கள் கிளிநொச்சியில் நூற்றாண்டுகாலமாக சிங்கள ஆதிக்கம் நிலவி வருவதன் அடையாளமாக இருந்தது.
ஆகவே இன்றய தினம் கரைச்சி பிரதேச சபை நடவடிக்கை காரணமாக அவை அகற்றப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த 03 வருடங்களாக தொடர்சியாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தார்.
இதனை அடுத்து இன்று இவ்வேலை மேற்கொள்ளப்பட்டது.