தியாகி திலீபனின் நினைவு நாளில், நினைவு தூபி முன் கட்சிகளுக்கிடையில் சண்டை..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவு நாளில், நினைவு தூபி முன் கட்சிகளுக்கிடையில் சண்டை..

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்னே தனிக் கட்சி அரசியல் செய்ய முற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா் ஏனையோரிடம் அநாகரிகமாக நடாந்தமை பார்ப்போரை முகம் சுழிக்க வைத்தது.

நல்லூரில் உள்ள தியாக தீபம. திலீபனின் முன்னே உள்ள மாநகர சபையின் ஆளுகையில்ல உள்ள நினைவுத் தூபியில் அலங்காரத்தை மேற்கொண்ட முன்னணியினர் தமது கட்சியின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோர் சகிதம் நிகழ்வை நடாத்த முனைந்த நிலையில் ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

இந்த நிலையில் அஞ்சலி நிகழ்வு முடிவுற்றதும் நிகழ்வு நினைவுற்றதாக அறிவித்த நிலையில் அங்கே பிரசன்னமாகியிருந்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டனர். 

இதனை அவதானித்த முன்னணியினர் வேண்டுமென்றே பாடலை அதிக சத்தத்துடன் ஒலிக்க விட்ட நிலையில் இதனால்தான் நான் பேச விரும்பவில்லை என அவைத் தலைவர் பதிலளித்தார்.

இதனை அவதானித்த ஜனநாயகப் போராளிகள் அமைப்பைச் சேர்ந்தோர் பாடலின் ஒலியை குறைக்குமாறு கோலியதனால் மேலும் சத்தத்தினை அதிகரித்த நிலையில் நிகழ்வு முடிந்தால் போகவேண்டியதுதானே பிரகென்ன. 

அரசியல் எனத் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அச்சுறுத்தலில் ஈடுபட்டமையினால் தர்க்கம் நீடித்தது. அதன்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியினருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் நானும் இயக்கம்தான் நானும் இயக்கம் என கூறியவாறு தர்க்கத்தில் ஈடுபட்டதோடு தாக்க முனைந்தமையால் பதற்றம் நிலவியது.

இருப்பினும் சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு