SuperTopAds

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

ஆசிரியர் - Admin
யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கான “வயவர்களின் சங்கமம்” ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(16) காலை-09 மணி முதல் கல்லூரியின் ஆ.சி. நடராஜா அரங்கில் கல்லூரியின் அதிபரும், பழைய மாணவர் சங்கத் தலைவருமான வி.ரி. ஜயந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பொறியியலாளரும், கல்லூரியின் பழைய மாணவருமான சின்னையா வதனகுமார் மற்றும் அவரது பாரியாரும், வவுனியா தமிழ் மகாவித்தியாலய ஆசிரியையுமான திருமதி- குமாரநந்தினி வதனகுமார் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் அனைத்துப் பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.