தெல்லிப்பழை வைத்தியசாலையில் திடீர் டெங்கு சோதனை..

ஆசிரியர் - Editor I
தெல்லிப்பழை வைத்தியசாலையில் திடீர் டெங்கு சோதனை..

தெல்லிப்பளை வைத்தியசாலையில் பணியாற்றும் 6 ஊழியர்களிற்கும் அங்கே சிகிச்சை பெற்று வெளியேறிய நால்வருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டதனையடுத்து நேற்றைய தினம் மாவட்ட சுகாதார பணிப்பாளரின் உத்தரவின் பெயரில் விசேட டெங்கு பரிசோதனை இடம்பெற்றது.

தெல்லிப்பளை வைத்தியசாலைப் பிரதேசத்தில் நீண்ட காலமாக டெங்கு பரவல் கானப்பட்டமை தொடர்பில் முறையிடப்பட்ட நிலையில் வைத்தியசாலை தொடர்பில் கவனம் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் கடந்த மாதங்களில் ஒன்று இரண்டாக காணப்பட்ட டெங்கு பேருக்கும்

 கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்தமையினையிட்டு டெங்குத் தாக்கம் கொண்ட நுளம்புகள் வைத்தியசாலை வளாகத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்றைய தினம் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த சோதனையின்போது வைத்தியசாலை வளாகத்தில் நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு குடம்பிகள் பரவலாக கானப்பட்டுள்ளது. குறித்த இடங்கள் தொடர்பில் பரிசோதனைக் குழுவினர் அறிக்கையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேநேரம் ஏனைய திணைக்களங்கள் வீடுகளில் ஓர் சிரட்டை அல்லது சாடிகளில் சில நுளம்புக் குடம்பிகள் கானப்படும் சமயத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வைத்தியசாலையிலேயே இந்த நிலமை என நோயாளர்கள் கவலை தெரிவிப்பது 

தொடர்பில் சுகாதாரத் திணைக்கள அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம் மேலதிக நடவடிக்கை இடம்பெறும். எனத் தெரிவித்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு