ஐனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவைக்கு பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor
ஐனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவைக்கு பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு..

ஜனாதிபதி செயலகத்தால் நடாத்தப்படும் நடமாடும் சேவைக்காக பிரதேச அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஊடாக நிதி அறவீடு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பிரதேச செயலக ரீதியில் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இந்த நடமாடும் சேவைகளிற்காக குறித்த அமைச்சின் ஊடாக ஓர் பிரதேச செயலகத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா மட்டும் ஒதுக்கப்படுகின்றது. 

இருப்பினும் குறித்த நடமாடும் சேவையில் பிரதேச , மாவட்ட மற்றும் அமைச்சின் அதிகாரிகள் என சுமார் 100 பேரும் சேவையினை பெறுவதற்காக சமூகமளிக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் சமூகமளிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த அலுவலர்கள் பொது மக்களின் தேநீர் மற்றும் உணவு உள்ளிட்ட செலவுகளிற்கு பல லட்சம் ரூபா பணம் தேவையாகவுள்ளமையினால் எஞ்சிய தொகை பொது அமைப்புக்கள் , பிரதிநிதிகள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. 

இவ்வாறு பணம் அறவிடுவது தொடர்பில் பலர். தமது விசணத்தை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள வரும் பொது மக்களிற்கான அனைத்து தேவைகளையும் அன்றைய தினம் இலவசமாகவே வழங்குவதே திட்டம் . இருப்பினும் வழங்கப்படும் பணம் மிக குறைந்தளவு. 

ஆகையினால் கிராமத்தின் சகலரிடமும் அல்ல. அதேபோன்று சாதாரண அமைப்புக்களிடம் அன்று நிதி நிலமை உள்ள குறிப்பிட்ட சிலரிடம் இருந்து செலவு தொகைக்கு ஏற்ப அந்த நிதியை பெற்றே 

எஞ்சிய தொகையை சீர் செய்யுமாறே அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு அமையவே அந்த நிதியை பிரதேச செயலாளர்கள் கோருகின்றனர். எனப் பதிலளித்தார். 

Radio
×