SuperTopAds

பாதுகாப்பு காரணங்களை காட்டி இடமாற்றம் கேட்ட வைத்தியாின் இடமாற்றத்தை இரத்து செய்யுங்கள்..

ஆசிரியர் - Editor I
பாதுகாப்பு காரணங்களை காட்டி இடமாற்றம் கேட்ட வைத்தியாின் இடமாற்றத்தை இரத்து செய்யுங்கள்..

மன்னார் மாவட்ட மருத்துவ மனையில் இருந்து பாதுகாப்பு காரணங்களை காட்டி வெளியேறிய மகப்பேற்று நிபுணரின் இடமாற்று கோரிக்கையினை நிராகரித்து மீண்டும் மன்னாரிற்கே அனுப்பி வைக்குமாறு மாகாண சுகாதாரத் திணைக்களம் மத்திய சுகாதார அமைச்சிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. 

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஓர் மகப் பேற்றின்போது ஓர் வைத்தியர் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற நிலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் . இந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்த இரு மகப்பேற்று நிபுணர்களில் ஒருவரான தென்னிலங்கையை சேர்ந்த வைத்தியர் பாதுகாப்பு இல்லை . எனத் தெரிவித்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்கான மாற்றலை மத்திய சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.

இருப்பினும் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவித்த்தின் பின்னர் பாதுகாப்பு நிலமைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் குறித்த வைத்தியரின் சேவை மாவட்டத்திற்கு தொடர்ந்தும் தேவை என்பதனை கருதி மீளவும் மன்னாரிற்கு அனுப்பி வைக்குமாறு 

மாகாண சுகாதாரத் திணைக்களம் அவசர கோரிக்கையினை மத்திய சுகாதார அமைச்சின் கவனத்மிற்கு கொண்டு வந்துள்ளனர். இதேநேரம் மன்னார் வைத்தியசாலையில் படியில் இருந்த இரு   மகப்பேற்று நிபுணர்களில் ஒருவர் தனது ஒருவார  கற்கை  விடுமுறைக் காலம் நிறைவுற்று கடந்த திங்கட் கிழமை முதல் 

பணிக்குத் திரும்பியுள்ளதனால் குறித்த சிகிச்சை ஓரளவு தடைகள் இன்றி இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்.