வடமாகாண மீள்குடியேற்ற கொள்கை ஆவணம் தொடர்பில் ஆராய விசேட அமர்வு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மீள்குடியேற்ற கொள்கை ஆவணம் தொடர்பில் ஆராய விசேட அமர்வு..

வடமாகாண மீள்குடியேற்ற ஆவணத்தை மாகாணத்தின் உத்தியோகபூர்வ கொள்கை ஆவணமாக பிரகடனப்படுத்துவதற்கான விசேட அமர்வு ஒன்று எதிர்வரும் அக்டோபர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ளது. 

வடமாகாணசபையின் 131வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் சபையில் உரையாற்றுகையில், ஜனாதிபதியுடன் 2015ம் ஆண்டு நடைபெற்ற மீள்குடியேற்றம் 

தொடர்பான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக நிபுணர்களை பணிக்கமர்த்தி வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற கொள்கை ஆவணம் ஒன்றும், வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையிலான 

கொள்ளை ஆவணம் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. இந்த கொள்கை ஆவணங்கள் வடமாகாணத் தின் கொள்ளை ஆவணமாக உத்தியோகபூர்வமாக மாற்றும் நோக்கில் மாகாண அமைச்சர்சபையிடம் கையளிக்கப்பட்டது. 

அவ்வாறு கையளிக்கப்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகும் நிலையில் குறித்த கொள்ளை ஆவணம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை மாகாணசபையிலோ, சபைக்கு வெளியிலேயே சகல உறுப்பினர்களும் உள்ளடங்கிய வகையில் கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து 

அதில் அங்கீகரிப்பதன் ஊடாக உத்தியோகபூர்வமான கொள்கை ஆவணமாக இதனை உருவாக்கவேண்டும். அதற்கான விசேட கூட்டம் ஒன்றை ஒழுங்கமையுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட அவை தலைவர் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடமாகாணசபையின் விசேட அமர்வு ஒன்றை கூட்டி மேற்படி இரு கொள்கை ஆவணங்களும் உத்தியோகபூர்வமான மாகாணத்தின் கொள்கை ஆவணமாக மாற்றப்படும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு