SuperTopAds

நல்லூரில் நீதிபதியின் கைத்தொலைபேசி திருட்டு..

ஆசிரியர் - Editor I
நல்லூரில் நீதிபதியின் கைத்தொலைபேசி திருட்டு..

மல்லாகம் நீதிமன்ற நீதிவானின் கைத்தொலைபே சி நீதிவானின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த நிலை யில் திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனினும் அந்த இளைஞன் குற்றச்சாட்டை மறுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கொடியிறக்கத் திருவிழா நேற்று மாலை (09) இடம்பெற்றது.

நல்லூர் கந்தனை தரிசிப்பதற்காக மல்லாகம் நீதிமன்ற நீதிவான், அவரது குடும்பத்தினருடன், காரில் சென்றுள்ளார்.

நீதிவானை இறக்கிவிட்டு, அவரது மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் காரை நிறுத்திவைத்துள்ளார். எனினும் காரின் கண்ணாடியைப் பூட்டிவிட அவர் மறுந்துள்ளார்.

அதனால் காரிற்குள் இருந்த நீதிவானின் கைபேசி திருடப்பட்டுள்ளது.

நல்லூரானின் வழிபாட்டை முடித்து வந்த போதே, காரில் இருந்த கைபேசியை நீதிவான், மெய்பாதுகாவலரிடம் கேட்டுள்ளார்.

அதனைக் காணவில்லை என மெய்ப்பாதுகாவலரால் தெரிவிக்கப்பட்டது.

கைபேசி திருடப்பட்டதை அறிந்த நீதிவான், அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நல்லூர் ஆலய வளாகத்தில் நடமாடிய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.