நல்லூர் ஆலய உற்சபத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியிலும் திருட்டு..

ஆசிரியர் - Editor I
நல்லூர் ஆலய உற்சபத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியிலும் திருட்டு..

நல்லைக் கந்தன் ஆலயத்தின் நேற்றைய  ரத உற்சவத்தில் நிறைந்த லட்சக் கணக்கான பக்தர்களின் இடையே பல திருட்டுச் சம்பங்களில் லட்சக் கணக்கான பெறுமதியிலான உடமைகளும் இழக்கப்பட்டுள்ளது.

நல்லைக் கந்தனின் ரதோற்சவத்திற்காக நேற்றைய தினம் லட்சக் கணக்கில் கூடியிருந்தனர். இதன்போது ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிக நெரிசல்கள் கானப்பட்டதனைப் பயன் படுத்திய சில திருடர்கள் தமது கைவரிசயினை காட்டியுள்ளனர். 

இவ்வாறான சம்பவங்கள் ஆலயத்தின் உள்ளே சில சம்பங்கள் இடம்பெற்றபோதிலும் அதில் தங்க நகைகளே பறிபோயுள்ளது. அதேநேரம் ஆலயத்தின் வெளி வீதியில் தாலிக்கொடி பணப் பேஸ் ஆகியவற்றுடன் அதிக கைத் தொலைபேசிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இழக்கப்பட்ட பொருட்களில் பதிவுகளிற்கு கிடைத்தவையாக தங்க நகைகள் 5 , பணப் பேஸ் 4 ஆகியவற்றுடன் கைத் தொலைபேசிகள் 14ம் பதிவு செய்யப்பட்ட நிலையில் 3 தொலைபேசிகள் தவற விட்ட நிலையில் 

கண்டெடுத்தவர்களினால் மீள ஒப்படைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு