கிளிநொச்சியில் 12 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் 12 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு..

கிளிநொச்சி மாவட்டத்தின் எப் பகுதியிலும் குடிநீர்த் தட்டுப்பாடு என கோரிக்கை கிடைக்கும் பட்சத்தில் சகலருக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் . என மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் அதிக வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறு பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக இதுவரை 12 ஆயிரத்து 431 குடும்பங்கள் பதிவினை மேற்கொண்டு குடிநீர் வசதி கோரியுள்ளனர். 

அவ்வாறு குடிநீர் வசதி கோரியுள்ள அனைவருக்கும் 4 பிரதேச செயலகங்களின் ஊடாகவும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. 

ஏனெனில் இவ்வாறான குடிநீர் விநியோகத்திற்கான நிதி எமக்கும் தட்டும்பாடோ அல்லது மட்டுப்பாடோ கிடையாது. அதனால் உடனடியாகவே அதனை மேற்கோள்ள முடியும். 

இவ்வாறு குடிநீர் வசதி கிடைக்காத மக்கள் இருப்பினும் அந்தப் பகுதி கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு தமக்கான வேண்டிய குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வரட்சி நிலவும் பிரதேசங்களிற்கு தற்போது நீர்த் தாங்கிகள் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இருப்பினும் குடிநீர் அல்லாத ஏனைய நீர்த் தட்டுப்பாடுகள் இருக்ககூடுமே அன்றி குடிநீர் அற்ற நிலமை ஏற்படமாட்டாது அச் சேவையினை மாவட்டச் செயலகம் தொடர்ந்தும் வழங்கும். என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு