முஸ்லிம் வியாபாரியிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸார். தமிழ் குடும்பம் மீது கோர தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் வியாபாரியிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸார். தமிழ் குடும்பம் மீது கோர தாக்குதல்..

வவுனியா கனகராயன் குளம் பகுதியில் தமி ழ் குடும்பம் ஒன்றின் காணியில் வாடகைக்கு இருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அங்கிருந் து வெளியேற மறுக்கும் நிலையில் இது குறி த்து முறைப்பாடு கொடுக்க சென்ற காணி உ ரிமையாளருடைய குடும்பம் மீது பொலிஸார் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் பாதிக்கப்பட்டு ள்ள குடும்பம் மேலும் கூறுகையில், 

கனகராயன்குளம் பகுதியில் உள்ள தாஸ் ஹோட்டல் இடம்பெறும் நிலம் எமக்குச் சொந்தமானது. அதில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ள நிலையில் ஒரு ஏக்கரை மட்டும் 2010ம் ஆண்டு 2 ஆண்டுகால குத்தகைக்கு எழுதிக் கொடுத்தோம். 

அவ்வாறு வழங்கப்பட்ட குத்தகை 2 ஆண்டுகளிற்கு ஒரு தடவை புதுப்பிக்கக்பட்டு 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாத்த்துடன் நிறைவடைந்து விட்டது. அதன் அடிப்படையில் எமது நிலத்தை விடுமாறு எழுத்துமூலம் அறிவித்தும் சட்டத்திற்கு முரணாக அடாத்தாக கடை நடாத்தப்படுகின்றது.

இந்த நிலையில் பல தடவை நாம் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் கிடையாது. இந்த நிலமையில் எஞ்சிய ஒரு ஏக்கர் நிலத்தில் நாம் வாழ்வாதாரத்திற்காக தென்னை நாட்டியுள்ளோம். 

அதற்கு காலையில் நீர் இறைத்தவேளையில் கடை உரிமையாளர் வேண்டுமென்றே சண்டைக்கு வந்த நிலையில் பொலிசாரும் காலையில் வந்து பார்த்துச் சென்றனர். அதன்போது ஏதும் தெரிவிக்கவும் இல்லை. 

மாலையில் மீண்டும் பொலிசார் வந்து கடைக்குள் மறைந்திருந்த சமயம் கடை உரிமையாளர் சண்டை செய்தாவாறு அழைத்தார். அந்த இடத்திற்கு சென்ற எனது கணவனை கனகராயன்குளம் பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரி  பலமாக தாக்கினார்.

அவ்வாறு தாக்குவதனை அவதானித்த நான் ஓடிச் சென்றவேளையில் நான் ஓர் பெண் என்றும் பாராத அந்த பொறுப்பதிகாரி என்னையும் பலமாக தாக்கி எனது சட்டையை பிடித்து இழுத்து இரு பக்க சட்டைகளும் கிளிந்த நிலையில் நடு வீதியில் நின்றேன். 

இதனை அவதானித்த 16 வயது மகன் அம்மாவை விடுங்கள் என கத்தி என்னை இழுத்தமையால் அந்த பொறுப்பதிகாரி எனது மகனின் தொண்டையை திருகியதால் தொண்டை வீங்கிய நிலையில் எனது மகன் கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

இதேநேரம் எனது 13 வயது பெண் பிள்ளையின் வயிற்றில் ஈனிரக்கம் அற்று கோரத்தனமாக குத்தியதனால் பாதிக்கப்பட்ட நிலையில் எனது பெண் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனது கணவர் முன்னாள் போராளி என்றதைக் கூறி தொடர்ந்தும் அச்சுறுத்தி வந்ததால் பொறுமை காத்தோம். என்ன செய்வது பொலிசாரிற்கு கடை உரிமையாளர்போல் பணத்தை இறைக்க நாம் ஒன்றும் பணம் படைத்தவர்கள் அல்ல . என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு