விளையாட்டில் இரு குழுக்களுக்கிடையில் உருவான முறுகலே சாக்கோட்டை மோதலுக்கு காரணம்..

ஆசிரியர் - Editor I
விளையாட்டில் இரு குழுக்களுக்கிடையில் உருவான முறுகலே சாக்கோட்டை மோதலுக்கு காரணம்..

பருத்துறை- உதயதாரகை மைதானத்தில் நேற்று காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு குழு க்களுக்கிடையில் உருவான முறுகல் நிலையே சக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதலாக வெடித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது, 

பருத்துறை உதயதாரகை மைதானத்தில் பலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நேற்று உதைபந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு அணிகளுக்கிடையிலும் முறுகல் நிலை உருவாகியுள்ளது. இதனை யடுத்து இன்று காலை பலாலி விண்மீன் அணி இன்று காலை இளைஞர் குழுவுடன் சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.

இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையி லும் பாரிய மோதல் உருவாகியுள்ளது. இ தனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்ட 75 பேரை சுற்றிவளைத்து பிடித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு