அச்சுறுத்தல்களை தாண்டி வெடுக்குநாறி மலை ஆதி ஐயனார் ஆலய திருவிழா..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தல்களை தாண்டி வெடுக்குநாறி மலை ஆதி ஐயனார் ஆலய திருவிழா..

தொல்லியல் திணைக்களம் மற்றும் பொலிஸாருடைய அதியுச்ச அச்சுறுத்தல்களையும் தாண்டி ஒலுமடு மக்கள் வெடுக்குநாறி ஆதி ஐயனார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திரு விழாவை நடாத்திவருகின்றனர். 

மிக நீண்டகாலமாக ஒலுமடு மற்றும் வவுனியா வடக்கு மக்களின் பாரம்பரியம் மற்றும் சமய விழுமியங்களில் ஊறிய ஆதி ஐயனார் ஆலய வழிபாட்டை தடுக்கும் வகையில் தொல்லில் திணைக்களம் மற்றும் பொலிஸார் நடந்து கொண்டனர். 

குறிப்பாக வெடுக்குநாறி மலையில் ஏற கூடாதெனவும், காட்டுக்குள் செல்ல கூடாதெனவும், ஆலயத்திலிருந்து 400 மீற்றர் வெளியே நின்று வழிபடவேண்டும் எனவும் கூறிய பொ லிஸார் காட்டுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள்

என கடுமையான அச்சுறுத்தல்களை விடுதிருந்தனர். இந்நிலையில் இந்த அச்சுறுத்தல்க ளை பொருட்படுத்தாமல், தங்கள் உரிமை, சமயவிழுமியங்களை விட்டுக் கொடுக்காமல் வெகு விமரிசையாக ஆதி ஐயனார் ஆலய திருவிழாவை நடாத்திவருகின்றனர். 

இதற்கு வெளியிடங்களில் இருந்து பெருமளவான பக்தர்கள் செல்வதுடன் உதவிகளையும் வழங்கி வருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு