SuperTopAds

மணிவண்ணன் இல்லாமையால் யாழ்.மாநகரசபை மராபத்து குழு முடங்கியுள்ளது..

ஆசிரியர் - Editor I
மணிவண்ணன் இல்லாமையால் யாழ்.மாநகரசபை மராபத்து குழு முடங்கியுள்ளது..

யாழ் மாநகர சபையில் மராபத்துக் குழுவின் தலைவராக இருந்தவர் மீண்டும் சபைக்கு  வருவதற்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவி தொடர்பில் தமிழ்க் காங்கிரஸ் ஏற்படுத்தும் சர்ச்சையினால் மராபத்துக் குழுவின் கூட்டம் கூட முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ( மராபத்து ) வேலைப்பகுதி குழுவின் தலைவராக அகில இலங்கை தமுழ்க் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிவண்ணன் தலைஙராக செயல்பட்டார். இந்த நிலையில் மணிவண்ணனின் உறுப்புறுமை தொடர்பில் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு காரணமாக 

மணிவண்ணன் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபையின் வேலைகளின் சிபார்சிற்காக வேலைப் பகுதியின் குழுக் கூட்டம் இடம்பெறவேண்டிய நிலையில் நேற்று முன்தினம் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

வேலைப் பகுதிக்   குழுவில் தமிழ் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த இருவரில் இரண்டாவது உறுப்பினர் பங்குகொண்டிருந்தார். இதனால் குழுவின் கூட்டத்தினை நடாத்த மணிவண்ணனின் விடயத்திற்கு நிரந்தரத் தீர்வு வரும் வரை ஓர் தலைவரை பிரேரித்து கூட்டத்தை நடாத்தலாம். 

நிரந்தரத் தீர்வின் பின்னர் இறுதி முடிவை எட்டலாம் என ஆலோசணை முன் வைக்கப்பட்டு குறித்த குழுவின் தலமைப் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியமையினால் அக் கட்சியின் உறுப்பினர் தலைவராக செயல்படலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும் அக் கட்சியை சே்ந்தவர் அந்த ஆலோசணையை நிராகரித்தார்.

அவ்வாறு குழுவின் தலமைப் பொறுப்பை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஏற்க மறுப்பதனால் வேறு ஒருவரை தலைவராக நியமித்து குழுவை நடாத்நலாம் என மற்றுமோர் ஆலோசணை முன்வைக்கப்பட்டது. இந்த ஆலோசணையின் பிரகாரம் வேறு ஒருவரை தலைவராக நியமித்தால் குழுவில் இருந்தே நிரந்தரமாக விலகி விடுவோம் என தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.

இதன் காரணமாக  மராபத்துக் குழுக் கூட்டம் அத்தோடு இடை நிறுத்தப்பட்டு அடுத்த பொதுக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எட்டுவதாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக சபையின் வேலைகளே தாமதமடையும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.