விகாரை அமைக்க காணி அளவீடு செய்ய முயன்ற இராணுவம் மக்களின் எதிர்ப்பால் ஓடி ஒழித்தனர்..

ஆசிரியர் - Editor I
விகாரை அமைக்க காணி அளவீடு செய்ய முயன்ற இராணுவம் மக்களின் எதிர்ப்பால் ஓடி ஒழித்தனர்..

நாயாற்று பகுதியில் சிரேஸ்ட நில அளவையாளர் இராணுவ நில அளவையாளர்களைக் கொண்டு நில அளவை செய்ய முற்பட்டமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் செம்மலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள நாயாற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் 

குருக்கந்த ராஜமஹா விகாரை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்ட பகுதி இன்று இராணுவ நில அளவையாளர்களால் நில அளவை செய்ய முற்பட்ட போது பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நாயாற்றுப் பகுதியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டிருந்த இடமும் தமிழ் மக்களுக்குச் சொந்தமானதும், 

ஏற்கனவே அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுமான காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் வர்த்தமான அறிவித்தல் மூலம் கையகப்படுத்தப்பட்டதுடன் இவ்விடத்தில் 60 அடி உயரமான குருக்கந்த ராஜமஹா விகாரை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பான நில அளவை நடவடிக்கைகள் கடந்த 03 யூலை 2018 இல் நடைபெற்ற போது, பொது மக்களாலும் அரசியல் தலைவர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் உரிய முடிவுகள் 

எட்டப்பட்ட பின்னரே நில அளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ச. சிவமோகனால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 07.09.2018 இன்று முல்லைத்த்Pவு மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் கெக்குலாவில நில அளவை திணைக்களத்தின் நில அளவையாளர்களைத் தவிர்த்து பிரதேச செயலாளர், கிராம அலுவலர் ஆகியோர் பிரசன்னமாகாத நிலையில்,

 சூட்சுமமான முறையில் சட்டத்திற்கு புறம்பாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகளையும், இராணுவ நில அளவையாளர்களையும் பயன்படுத்தி இவ்விகாரை அமைக்கப்படவுள்ள இடத்தை நில அளவை செய்து கொண்டிருந்த போது 

தகவல் அறிந்த பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் அருகில் இருந்த இராணுவ முகாமில் சென்று ஒழிந்து கொண்டனர். 

இந்நிலையில் இராணுவ முகாமிற்குள் உட்புகுந்த மக்கள் சிலர் அவர்களை வெளியே அழைத்து வந்ததுடன் பொது மக்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தின் பின் அவர்கள் நில அளவை நடவடிக்கைகளை கைவிட்டு அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு